Thursday Fasting: இன்றே இதை செய்தால் குரு பகவானின் ஆசி உங்களுக்குத்தான்.. யோகம் உண்டாகும்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Thursday Fasting: இன்றே இதை செய்தால் குரு பகவானின் ஆசி உங்களுக்குத்தான்.. யோகம் உண்டாகும்!

Thursday Fasting: இன்றே இதை செய்தால் குரு பகவானின் ஆசி உங்களுக்குத்தான்.. யோகம் உண்டாகும்!

Karthikeyan S HT Tamil
Feb 01, 2024 06:40 AM IST

வியாழக்கிழமை விரதம் இருந்தால் குரு பகவானின் அனைத்து நன்மைகளையும் பெற முடியும் என்பது நம்பிக்கை. வியாழக்கிழமை விரதத்தின் மகிமை பற்றியும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

குருவார விரதம்
குருவார விரதம்

குரு பகவானுக்கு உகந்த நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது. வியாழக்கிழமைகளில் குரு பகவானை மனதார நினைத்து மேற்கொள்ளும் விரதம் குரு வார விரதம் ஆகும். குரு பகவானின் அருளை பெறுவதற்கு இந்நாளில் விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வாரத்தில் வரும் 7 நாட்களில் வியாழக்கிழமை 'பிரகஸ்பதி' எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. ஒரு ஆண்டில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும்.

குரு பகவானை நினைத்து விரதம் இருப்பவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலையிலேய் எழுந்து சுத்தமான நீரில் குளித்துவிட்டு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். உணவு, தண்ணீர் என எதையும் உட்கொள்ளாமல் நவகிரக சன்னதிக்குச் சென்று மஞ்சள் நிறப் பூக்களை நைவேத்தியமாக படைக்க வேண்டும். குருபகவானுக்கு மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் கூடுதல் சிறப்பாகும்.

பின்பு குங்குமப் பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். விரதம் இருக்கும் நாட்களில் தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது சிறப்பான பலன்களை தரும்.

மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை எளிய நிலையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம். மூன்று ஆண்டுகள் இந்த விரதத்தை சரியாக கடைப்பிடிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

குரு பகவானுக்குரிய இந்த வியாழக்கிழமை விரதத்தை முழுமையாகக் கண்டுபிடிப்பவர்களுக்கு வாழ்க்கையில் பல யோகங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமணத் தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில், வியாபாரம், உயர் பதவி, செல்வ செழிப்பு போன்றவை நிவர்த்தியாகும். வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner