தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024 Pooradam: தடைகள் உண்டு! விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் - பூராடம் நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்

Guru Peyarchi 2024 Pooradam: தடைகள் உண்டு! விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் - பூராடம் நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 03, 2024 09:00 PM IST

மூலம் நட்சத்திரம் போல், பூராடம் நட்சத்திரம் நான்கு பாதங்களும் தனுசு ராசியில் இடம்பிடித்துள்ளது. குரு பெயர்ச்சியில் இந்த நட்சத்தினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்

பூராடம் நட்சத்தினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
பூராடம் நட்சத்தினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

பூராடம் நட்சத்தினர் சுக்கிர பகவான் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பீர்கள். சுக்கிர பகவானின் வீட்டுக்குதான் தற்போது குரு பகவான் பெயர்ச்சி எடுத்துள்ளார்.

குரு பெயர்ச்சியால் பூராடம் நட்சத்தினர் பெறும் பலன்கள்

விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் காலமாக இந்த குரு பெயர்ச்சி அமையும். மேற்படிப்பு படிக்க விரும்பவோர், வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கும் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். படிப்பில் நன்கு கவனம் செலுத்துங்கள்

முதலீடு செய்வதற்கான உகந்த காலமாக இருப்பதால் அதுதொடர்பான முயற்சிகளை மேற்கொள்ளலாம். பொருளாதார நிலை சீராக இருக்கும். வருமானம் உண்டு. எடுக்கும் முயற்சிகளை வெற்றியை கொடுக்கும். நம்பிக்கை உரியவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். மனகுழப்பங்கள் ஏற்படலாம்.

வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. கடன் உதவிகள் கிடைக்கும். தேவையில்லாத விரயத்தை தவிர்க்கவும். வீடு அல்லது இடமாற்றம் உண்டு. தொழிலில் இருப்பவர்கள் போதிய அளவில் லாபமும், பணப்புழக்கமும் இருக்கும்.

கணவன் மனைவி இடையிலான உறவில் சிக்கல்கள் உருவாகலாம். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சென்றால் நற்பலன்களை பெறலாம்.

உடல்நிலையை பொறுத்தவரை வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் வரும். எதிர்பாராத பயணங்கள் உண்டு. ஆலய தரிசனத்தால் அமைதி காண்பீர்கள்.

தசாபுத்தி பலன்கள்

சூரிய திசையில் இருப்பவர்களுக்கு (20 வயது வரை) மாணவர்களுக்கு படிப்பில் எந்த தடையும் இல்லாமல் முயற்சிகள் சாதகமாக அமையும். எனவே பெரிய பாதிப்புகள் எதுவும் கிடையாது

சந்திர திசையில் இருப்பவர்கள் (30 வயது வரை) வேலை வாய்ப்பில் சிறிய தடை ஏற்படலாம். எதிர்பார்த்தை வேலை கிடைப்பதில் தாமதம் வரலாம். எந்த முடிவையும் யோசித்து எடுக்க வேண்டும். வாகனத்தில் செலுலம்போது கவனம் தேவை, உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். அலைச்சல் ஏற்படும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் அமைவதில் இருந்து வந்த தாமதம், நெருக்கடிகள் விலகும். தொழில் சார்ந்து முன்னேற்றத்தை பெறுவீர்கள்

செவ்வாய் திசையில் இருப்பவர்கள் (37 வயது வரை) வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்வீர்கள். பொருள் சேர்க்கை உண்டு. பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செல்வு ஏற்படும். பெண்களுக்கு உடன் பிறந்தவர்களாலும், உறவினர்களாலும் இருந்து வந்த பிரச்னைகள், மன அழுத்தங்கள் குறையும்.

ராகு திசையில் இருப்பவர்கள் (55 வயது வரை) செய்யும் தொழிலில் பாதிப்புகள் ஏற்படலாம். பணபற்றாக்குறை இருந்தாலும் முயற்சிகளால் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

குரு திசையில் (71 வயது வரை) இருப்பவர்களுக்கு கடன் பிரச்னை தீரும். உடலில் இருந்து வந்த நோய் பாதிப்புகள் நீங்கும். மேன்மையை அடைவீர்கள். சுப விரயங்கள் ஏற்படும்.

சனி திசையில் இருப்பவர்கள் (90 வயது வரை) உடல் சார்ந்த தொந்தரவுகள் ஏற்படாம். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொலைதூர பயணங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்து சார்ந்து முடிவுகளை எடுக்க வேண்டாம்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்