’நீசம் ஆன சூரியன்! துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் எப்படி இருக்கும்?’
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’நீசம் ஆன சூரியன்! துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் எப்படி இருக்கும்?’

’நீசம் ஆன சூரியன்! துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் எப்படி இருக்கும்?’

Kathiravan V HT Tamil
Published Oct 18, 2024 06:10 AM IST

ஐப்பசி முதல் நாளான இன்று சூரிய பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆனார். கிரகங்களின் ராஜாவான சூரிய பகவானின் பெயர்ச்சியின் அடிப்படையிலேயே தமிழ் மாத பிறப்பு அமைகிறது.

’நீசம் ஆன சூரியன்! துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் எப்படி இருக்கும்?’
’நீசம் ஆன சூரியன்! துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் எப்படி இருக்கும்?’

இது போன்ற போட்டோக்கள்

துலாம்

வாழ்கை பாடத்தை கற்றுக் கொடுக்கும் மாதம் இது. கட்டுப்பாடு உடன் செயல்படும் போது நன்மைகள் கிடைக்கும். உங்களை புதுப்பித்து கொள்ள சிறந்த காலம். பலரும் உங்களது செயல்பாடுகளை கவனிப்பார்கள். தொழிலில் உங்கள் ஆளுமை மேம்படும். உங்கள் தலைமைத்துவ திறன்களை நிரூபிக்க வேண்டிய காலம் இது. 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தூக்கம் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருங்கள். கடும் பணிகளுக்கு இடையே ஓய்வு எடுத்து கொள்வது அவசியம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்கவும். நிதி முதலீடுகளைச் செய்வதற்கு இது சிறந்த நேரம் அல்ல. ஆற்றல், சிந்தனை, செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு தலைமை பொறுப்புகள் தேடி வரும். பணியிடங்களில் உங்கள் ஆலோசனைகள் பலராலும் மதிக்கப்படும். சேமிப்பு, சொத்து வாங்குதல் உள்ளிட்ட புதிய முதலீடுகளை ஆர்வமுடன் செய்வீர்கள். காதல் உறவில் இருந்த சிக்கல்கள் தீரும். வாழ்கை துணை உங்களின் லட்சியம் மற்றும் கனவுகளுக்கு துணையாக இருப்பார். 

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு வெற்றி அடைவதற்கான உந்துதல் இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வெகுமதி கிடைக்கும். பதவி உயர்வு அல்லது புதிய வேலைக்காக நீங்கள் தயாராகி இருந்தால், அதற்குச் செல்ல இதுவே சரியான நேரம். வேலை தேடுபவர்கள் நீண்ட கால வாழ்க்கைக்கு ஆர்வமுள்ள வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளை புறக்கணிக்க வேண்டாம். 

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் எதிர்காலத்தை திட்டமிடுவதில் கவனமாக இருப்பார்கள். கல்வி, பயணம், ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்கையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் மூலம் பணவரவு உண்டாகும். வளர்ச்சி திட்டங்களை திட்டி வெற்றி பெறுவீர்கள். கல்லீரல் வீக்கத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு கடந்த காலங்களில் நிலவிய பிரச்னைகள் தீரும். உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் இது. அச்சம் மற்றும் தீர்க்கப்பட்டாத பிரச்னைகளை தைரியமாக தீர்க்க வேண்டிய காலம். இது மன அழுத்தத்தை கொடுத்தாலும், இறுதியில் நன்மைகளை தரும். கடன்கள், காப்பீடுகள், வரி விவகாரங்களில் விழிப்பு அவசியம். காதல் உறவில் கவனம் தேவை. சிக்கல்களை பொறுமையாக பேசி தீர்க்க முயலவும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner