Agastya Munivar: சித்த மருத்துவத்தின் தந்தை அகத்திய முனிவரை ஸ்ரீ ராமர் சந்தித்த தருணம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Agastya Munivar: சித்த மருத்துவத்தின் தந்தை அகத்திய முனிவரை ஸ்ரீ ராமர் சந்தித்த தருணம்!

Agastya Munivar: சித்த மருத்துவத்தின் தந்தை அகத்திய முனிவரை ஸ்ரீ ராமர் சந்தித்த தருணம்!

Manigandan K T HT Tamil
Jan 23, 2024 06:00 AM IST

Father of Siddha medicine: அகஸ்தியர் சித்த மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

அகத்திய முனிவர்
அகத்திய முனிவர்

அகத்தியரும் மகிழ்ந்து ஆசி கூறி, தம்மிடருந்த ஸ்ரீ மகாவிஷ்ணுவின் வாள், வில், தனுசு, அம்புகள் போன்றவற்றை ராமருக்குக் கொடுத்து பெருமைப்படுத்தினார். அவரை வலம் வந்து, நமஸ்கரித்து பின், பஞ்சவடிச் செல்லத் தொடங்கினர்.

நடந்து கொண்டிருக்கும் போது, ஸ்ரீ ராமர், லக்ஷ்மண் மற்றும் சீதைக்கு, முனிவர் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்லி வந்தார். ஒரு சமயம், வாதாபி, இல்வலன் எனும் இரண்டு பெரும் அசுரர்கள், அப்பாவியான, ரிஷிகள் மற்றும் பிராமணர்களை, வேதியர்களைத் தாங்கள் நடத்தும் சிரார்த, திவச போஜன சாப்பாடு சாப்பிட அழைப்பர், இல்வலன் சமைப்பான். 

சாப்பிட்டு முடித்ததும், இல்வலன்,அவர்களைப் பார்த்து,"திருப்தியா" எனக் கேட்பான்‌. அவர்கள் திருப்தி எனச் சொன்னதும்,"சரி, வாதாபி வெளியே வா'" என சொன்னதும்,வாதாபி அவர்களின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு,வெளி வந்து,இருவரும் சேர்ந்து, கை கொட்டி,களித்து மகிழ்வர்.இப்படி ஒரு விபரீத விளையாட்டினால், ஒரு பெரிய கூட்டத்தையே மாய வித்தை செய்து, குலநாசம் செய்து கொண்டிருந்தனர்.

ஒருசமயம்,அகஸ்த்தியர், அவ்வழியே வர,இவரது மாட்சிமையை அறியாத அரக்கர்கள்,அவரைச் சாப்பிட அழைத்துப்போய், போஜனம் செய்வித்தனர். பின்பு திருப்தியா என்று கேட்ட பின்,வாதாபி வெளியே வா எனக் கூற, வெளியே வராத வாதாபியை எண்ணித் திடுக்கிட்டுத் திக்குமுக்காடிப்போய், அதிர்ச்சி கலந்த வருத்தம் அடைந்த,கோபத்துடன் அகஸ்த்தியர் மேல் பாய, அகஸ்த்தியர்,தம்முடைய உபாசன சக்தி கொண்டு, இறைச்சி ரூபம் கொண்டு தமது வயிற்றிலிருந்த வாதாபியை ஜீரணம் செய்தே விட்டார்.

மிகவும் ஆக்ரோஷமாகப் பாய்ந்து,தாக்க வந்த, அசுரனைத் தமது கோபப் பார்வையால் எரித்தே விட, அக்னிஜூவாலை தாக்கிய பரிணாமத்தின் அளவு தாங்காது,கீழே விழுந்து சாம்பலாகிப் போனான்.

இக்கதையை ஸ்ரீ ராமர் கூறி,இப்படிப்பட்ட பல நற்காரியங்களால்தான், சாதுக்கள் உட்பட பலரும் அகஸ்த்தியரை போற்றிப் புகழ்ந்து வழிபடுகின்றனர் எனக்கூறியதும் மஹரிஷி இத்மவாஹர் ஆசிரமம் வந்தது. ரிஷி வெளிவந்து, இவர்களை வரவேற்று,ஆசி கூறி,உள் அழைத்துச் சென்றார்.

"ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்"

என்பது வள்ளுவர் வாக்கு. தவ நெறியோடு வாழ்பவர், எண்ணிய அளவில், பகைவரை முழுமையாக அழித்தொழிக்கவும், மற்றவர்களைப் பேணிக் காக்கவும் முடியும் என்பது பொருள்.

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார்,சென்னை

தொடர்புக்கு: manivks47@gmail.com

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

Whats_app_banner

டாபிக்ஸ்