Aganda Samrajya Yogam: ‘ஆட்சியில் அமர வைக்கும் அகண்ட சாம்ராஜ்ய யோகம்!’ இந்த 4 லக்னத்தினருக்கு மட்டும்தான்!
”மிதுன லக்னம், சிம்மம் லக்னம், விருச்சிக லக்னம், மீனம் ஆகிய ராசிகளுக்கு மட்டுமே இந்த அகண்ட சாம்ராஜ்ய யோகம் அமையும்”
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள் ஆகும். பெரும் பொருள், பெரும் நிலம், ப்ரும் அதிகாரம், பெரும் புகழை தரக்கூடியதாக அகண்ட சாம்ராஜ்ய யோகம் உள்ளது. மன்னருக்கு ஒப்பான மரியாதை உடன் வாழும் தன்மையையும், தான் சார்ந்த துறையில் உச்சம் பெருவதையும், சொல் வாக்கால் செல்வாக்கை பெருவது உள்ளிட்ட நன்மைகளை அகண்ட சாம்ராஜ்ய யோகம் ஏற்படுத்துகிறது.
அகண்ட சாம் ராஜ்ய யோகம் உருவாக ஒருவரது ஜாதகத்தில், குரு பகவான் ஒரு கேந்திரம் மற்றும் மறு திரிகோணத்திற்கு அதிபதியாக வர வேண்டும். குரு 10ஆம் வீட்டுக்கு அதிபதியாகவோ அல்லது 5 ஆம் வீட்டுக்கு அதிபதியாக வந்தால்தான் இந்த அகண்ட சாம்ராஜ்ய யோகம் உண்டாகும்.
இந்த யோகத்தில் குருபகவான் நல்ல பலன்களை தர குரு பகவான் லக்ன கேந்திரத்தில் அமைய பெற்று இருக்க வேண்டும். அதாவது மிதுன லக்னத்திற்கு மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் குரு பகவான் இருக்க வேண்டும்.
சிம்மம் லக்னத்தினருக்கு சிம்மம், விருச்சிகம், கும்பம், ரிஷபம் ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் குரு பகவான் இருக்க வேண்டும். விருச்சிகம் லக்னத்தினருக்கு, விருச்சிகம், கும்பம், சிம்மம் ஆகிய ராசிகளில் ஏதாவது ஒரு இடத்தில் குரு பகவான் இருக்க வேண்டும். மீனம் லக்னத்தினருக்கு, மீனம், மிதுனம், கன்னி, தனுசு ராசிகளில் ஏதாவது ஒரு இடத்தில் குருபகவான் இருக்க வேண்டும்.
தானதிபதி, பாக்கியதிபதி, லாபாதிபதி ஆகிய கிரங்களில் 2 பேர் ஆட்சி மற்றும் உச்சம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இப்படி அமையப்பெற்ற ஜாதகர்கள் அடக்கி ஆளும் யோகம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
டாபிக்ஸ்