தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pancha Divya Yoga: பஞ்ச திவ்ய யோகத்தில் குளிக்கும் ராசிகள்.. பணமழை உறுதியானது.. 3 ராசிகள் பறப்பது உறுதி

Pancha Divya Yoga: பஞ்ச திவ்ய யோகத்தில் குளிக்கும் ராசிகள்.. பணமழை உறுதியானது.. 3 ராசிகள் பறப்பது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 11, 2024 11:37 AM IST

Pancha Divya Yoga: லட்சுமி நாராயண யோகம், கஜலட்சுமி யோகம், சச யோகம், புதாதித்த யோகம், மாளவ்யா யோகம் என ஐந்து ராஜ யோகங்களை உள்ளடக்கியது இந்த பஞ்ச திவ்ய யோகம். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

பஞ்ச திவ்ய யோகத்தில் குளிக்கும் ராசிகள்.. பணமழை உறுதியானது.. 3 ராசிகள் பறப்பது உறுதி
பஞ்ச திவ்ய யோகத்தில் குளிக்கும் ராசிகள்.. பணமழை உறுதியானது.. 3 ராசிகள் பறப்பது உறுதி

அந்த வகையில் பயணம் செய்யும்போது ஒவ்வொரு கிரகமும் ஒரே இடத்தில் இணையக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். அவ்வாறு ஏற்படும் பொழுது சுபயோகங்கள் அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அந்த வகையில் தற்போது அரிய வகை சுபயோகம் ஒன்று 500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கி உள்ளது.

இந்த யோகம் பஞ்ச திவ்ய ராஜயோகம் என அழைக்கப்படுகிறது. இது லட்சுமி நாராயண யோகம், கஜலட்சுமி யோகம், சச யோகம், புதாதித்த யோகம், மாளவ்யா யோகம் என ஐந்து ராஜ யோகங்களை உள்ளடக்கியதாகும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் பஞ்ச திவ்ய யோகம் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. சிறப்பான பலன்களை உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். எதிர்காலத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

மகர ராசி

பஞ்ச திவ்ய யோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் முன்னேற்றம் இரு மடங்காக இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாகனம் மற்றும் வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

ரிஷப ராசி

பஞ்ச திவ்ய யோகம் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட வேலைகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களை பெறுவார்கள். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel