தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sooriyan Neesam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சூரியன் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!

Sooriyan Neesam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சூரியன் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!

Kathiravan V HT Tamil
May 30, 2024 06:00 AM IST

Sooriyan Neesam: நமது லக்னத்திற்கு பொறுப்பேற்று கொள்ளும் ஜாதகமாக சூரியன் உள்ளார். துலாம் ராசியில் நீசம் ஆவதால் ஐப்பசி மாதம் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில் சூரியன் நீசம் என்ற நிலையில் இருப்பார்

Sooriyan Neesam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சூரியன் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!
Sooriyan Neesam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சூரியன் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!

நமது லக்னத்திற்கு பொறுப்பேற்று கொள்ளும் ஜாதகமாக சூரியன் உள்ளார். துலாம் ராசியில் நீசம் ஆவதால் ஐப்பசி மாதம் பிறக்கும் குழந்தைகளுக்கு சூரியன் நீசம் ஆவார்.

சூரியன் நீசம் பெறுவதால் ஜாதகருக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். சம்பாதிக்கும் ஆர்வம் குறைவாக இருக்கும். 

சூரிய வழிபாடு மற்றும் நமஸ்காரம் செய்வதால் சூரியனின் ஆசிகளை பெறலாம். 

சூரியன் நீசம் அடைவதால் 12 லக்னத்தினருக்கும் ஏற்படும் நன்மை, தீமைகள் 

மேஷம்

5ஆம் அதிபதியாக வரும் சூரியன் நீசம் ஆவதால் புத்திரர்கள் வழியில் சிக்கல், காதல் தோல்வி, விரக்தி, திருமண வாழ்கையில் சிக்கல்கள், கூட்டாளிகளால் விரோதம், அரசால் இழப்பு உள்ளிட்டவை ஏற்படும். நீச பங்கம் ஏற்பட்டால் சில நன்மைகள் ஏற்படும். 

ரிஷபம்

4ஆம் அதிபதியான சூரியன் நீசம் அடைந்தால் உடல் நலிவு, பித்தநோய்கள், உடல் உஷ்ணம், கண் பிரச்னை, வீடு, வாகனங்களில் பிரச்னை, தொழிலில் சிக்கல்கள், அரசால் பிரச்னைகள் உண்டாதல் ஆகிய பிரச்னை ஏற்படும். 

மிதுனம்

3ஆம் ஆம் அதிபதியான சூரியன் நீசம் ஆவது துணிச்சல் குறைந்த செயல்கள் மூலம் தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். நல்ல நண்பர்கள் கிடைக்காமல் போகும் நிலை உண்டாகும். தைரிய, வீரிய, செயல்திறன் இல்லாமல் போகும். 

கடகம்

கடக லக்னத்திற்கு சூரியன் நீசம் ஆனால் தேவையில்லாத வாக்குவாதம் ஏற்படுதல், பணம் சம்பாதிப்பதில் சிக்கல், கடன், நோய் உள்ளிட்ட தொல்லைகள் ஏற்படும். 

சிம்மம்

சிம்ம லக்னத்திற்கு சூரியன் நீசம் அடைவது சிறப்பு அல்ல, பிறரை சார்ந்து வாழும் நிலை ஏற்படும். ஆளுமை திறன் குறையும். 

கன்னி

விரையாதிபதி தனஸ்தானத்தில் நீசம் அடைந்தல் நன்மை, தீமை கலந்த பலன்கள் ஏற்படும். சுப விரையங்கள் ஏற்படும், வெளிநாட்டில் வசிப்பார்கள், பணத்தை தேடி அலையும் தன்மை தரும். அரசு தொடர்பான விஷயங்களில் சிக்கல் இருக்கும். 

துலாம்

உஷ்ணம் தொடர்பான கோளாறுகள், கண் பிரச்னைகள், பித்தம், தலைவலி, நரம்பு மண்டலம் பாதிப்பு, தகப்பனால் பலன் இல்லை, அரசால் அனுகூலம் இல்லை, மூத்த சகோதரர் உடன் பிரச்னை உள்ளிட்ட சிக்கல்கள் உண்டாகும். 

விருச்சிகம்

உத்யோகத்தில் நிலை இல்லாமை, அலைச்சல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும். ராஜயோகதிபதியான சூரியன் நீசம் அடைவது அவ்வளவு சிறப்பு அல்ல. 

தனுசு

தந்தை வழி உறவுகளில் சிக்கல், அரசால் ஆதாயம் இல்லமை, லாபம் வந்தும் அனுபவிக்க முடியாமை, ஆசைகள் நிறைவேறாத பிரச்னைகள் உண்டாகும். 

மகரம்

மகர லக்னக்காரர்களுக்கு சூரியன் நீசம் அடைந்தால் மறைமுகமாக திக்பலம் பெறுவார். இதனால் உத்யோகம், உயர்வு, தூரதேசத்தில் வசிக்கும் வாய்ப்பு, அரசு வேலை உள்ளிட்டவை கிடைக்கும். இருப்பினும் ஜாதகர் தன்னம்பிக்கை குன்றி இருப்பார். 

கும்பம்

வாரிசுகள் உருவாதில் பிரச்னை, மனைவி வழியில் பிரச்னை, முயற்சி குன்றுதல், ஆத்ம பலம் குன்றுதல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும். 

மீனம்

நல்ல உத்யோகம் இல்லாமை, உதவி செய்ய ஆட்கள் இல்லாமை, பங்கு சந்தையில் நஷ்டம், மறைமுக நோய்கள் ஏற்படுதல் ஆகிய பிரச்னைகள் உண்டாகும். 

WhatsApp channel