தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sevvai Neesam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ செவ்வாய் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!

Sevvai Neesam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ செவ்வாய் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!

Kathiravan V HT Tamil
Jun 02, 2024 06:00 AM IST

Sevvai Neesam: செவ்வாய் ஒருவருக்கு நீசம் ஆனால் பூமி, சகோதரவர்கம், இரத்தம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். எதையும் துணிந்து செய்ய முடியாத நிலை உண்டாகும். கடகத்தில் செவ்வாய் பகவான் நீசம் பெறுகிறார்.

Sevvai Neesam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ செவ்வாய் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!
Sevvai Neesam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ செவ்வாய் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!

செவ்வாய் ஒருவருக்கு நீசம் ஆனால் பூமி, சகோதரவர்கம், இரத்தம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். எதையும் துணிந்து செய்ய முடியாத நிலை உண்டாகும். கடகத்தில் செவ்வாய் பகவான் நீசம் பெறுகிறார். 

சந்திரன் உடன் இணையும் போதோ, குரு பார்வை படும் போதோ, வீடு கொடுத்த சந்திரன் உச்ச, ஆட்சி வலிமை பெரும் போது செவ்வாய் நீச பங்கம் அடைவார். 

மேஷம்

மேஷம் லக்னத்தின் லக்னாதிபதி கடகத்தில் நீசம் பெறுவது சிறப்பானது அல்ல. ஜாதகருக்கு தன்னம்பிக்கை குறைவு, தாயாதி வர்க்கத்துடன் தீராப்பகை, வீடு, வாகனம், வண்டியில் சிக்கல்கள், கல்வியில் தடை, முயற்சிகள் குன்றுவது, தைரிய, வீரிய செயல்திறன் இல்லாமல் இருப்பது, பூர்வீகத்தில் வசிக்க முடியாமல் இருப்பது, உடல் வலிமை குறைவது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, தவறான உறவுகள் மூலம் சிக்கல் ஏற்படுவது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

ரிஷபம்

திருமண வாழ்கை கெடுவது, தேவையற்ற விரயம், சகோதரர்களால் வழக்கு, சொத்துக்களை உறவினர்கள் களவாடுவது, ஆயுள் பலத்தை கெடுப்பது உள்ளிட்ட சிக்கல்களை ரிஷபம் லக்னத்தினர் சந்திக்க நேரிடும். 

மிதுனம்

6-க்கு உடையவன் 2இல் நீசம் அடைவது நல்ல விஷயம் என்றாலும், லாபாதிபதி நீசம் அடைவது அவ்வளவு நன்மைகளை தராது. செவ்வாய் கெடுதால் எதிரிகள் பணத்தை அடைதல், எதிரிகள் கெட்டுபோதல், கடன் மூலம் வெற்றிகள், எதிரி இல்லாத நிலை உள்ளிட்ட நல்ல பலன்கள் கிடைக்கும்.  லாபநோக்கம் இல்லாமல் நிறைய விரய செலவுகளை சந்திக்க நேரிடும், பூமி வாங்குவதில் சிக்கல்கள் ஏற்படும். 

கடகம்

பூர்வீக சொத்துக்கள் இல்லாமல் போவது, குணக்கேடு, நிரந்த தொழில் அமையாமல் போவது, சம்பாதிக்கும் திறன் இல்லாமல் போவது, வாரிசுகள் பலவீனம் அடைவது, தொழிலில் நம்பி ஏமாறுவது, பூர்வீக சொத்துக்களால் பயனில்லாமை, ரத்தம் தொடர்பான பிரச்னைகளை சந்திப்பது உள்ளிட்ட சிக்கல்கள் சந்திக்க நேரிடும். 

சிம்மம்

சொத்து சுகங்கள் இல்லாத நிலை, அந்நிய தேசத்தில் வசிப்பது, பூர்வீகத்தில் இருந்து வெகுதூரம் தள்ளி செல்வது, சகோதரர்களால் வஞ்சிக்கப்படுதல்,  நிலம் வாங்குவதன் மூலம் சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க நேரிடும். 

கன்னி 

கன்னி லக்னத்திற்கு செவ்வாய் நீசம் பெறுவது பெரும் கெடுதலை தரும் என்று சொல்ல முடியாது. தைரிய வீரிய செயல்திறன் சற்று குறைந்து இருக்கும். எந்த பிரச்னைகளுக்கும் முன்னால் சென்று எதிர்கொள்ளாமல் பின்புறம் நின்று தன்னுடைய காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். 

துலாம்

ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பம் அமைதல், குடும்ப வாழ்கையில் சிக்கல்கள், குடும்பமே இல்லாமல் போவது, முறைதவறிய வாழ்கை அமைவது, கூட்டாளிகள் மூலம் நஷ்டம் அடைவது உள்ளிட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். 

விருச்சிகம்

தைரியம் இல்லாத சூழல், துணிச்சல் இல்லாத நிலை, உறுதியற்ற வாழ்கை முறை, லட்சியம் இல்லாத வாழ்கை, குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் நிலை, உடல் பலவீனம் உள்ளிட்ட தீமைகள் ஏற்படும். 

தனுசு

பூர்வீக சொத்துக்களை இழப்பது, புத்திரர்களல் தொல்லை, அந்நிய தேசத்தில் குறைந்த கூலிக்கு கஷ்டப்படுதல் உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க நேரிடும். 

மகரம்

வாழ்கை துணை விஷயத்தில் பிரச்னை, தாய் இல்லாத நிலை, தாயாதி வர்கத்துடன் பிரச்னை, உயர்கல்வியில் தடை, நோய் உடன் கூடிய வாழ்கை துணை, மூத்த சகோதரரை இழத்தல், லாபம் அடைய முடியாத நிலை, சுகத்தை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். 

கும்பம்

தொழில் மேன்மை இல்லாமல் போதல், அடிமை தொழில் செய்தல், கடன், நோய், துணிச்சல் அற்ற மனநிலை, முயற்சிகளில் தவறு ஏற்படுவது, தீய நட்பு, உடன் பிறப்புகளால் கேடு, தொழில் மூலம் கடன் ஏற்படுதல், பூமி, விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில்களில் பெரும் நட்டம் உண்டாதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். 

மீனம் 

பாக்கியம், தனம், குடும்ப வாழ்கையில் இழப்புகள், ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பம் அமைதல், சொல்வாக்கு, செல்வாக்கு கெடுதல், குடும்ப உறுப்பினர்களை விட்டு விலகி வாழ்தல், நீண்ட தூர பிரயாணங்களில் இடைஞ்சல்கள் ஏற்படலாம். 

WhatsApp channel