Chandran Neesam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சந்திரன் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!
Chandran Neesam: பொதுவாக இரு ஜாதகத்தில் சந்திரன் நீசம் பெற்றால் ஜாதகர் மனநிலை குன்றியவராக இருப்பார் என்று சொன்னாலும், நீசம் பெற்ற சந்திரன் வளர்பிறையில் உள்ளாரா அல்லது தேய்பிறையில் உள்ளாரா என்பதற்கு ஏற்ப பலன்கள் மாறுபடலாம்.

உயிருக்கு காரக கிரகம் சூரியன் என்றால், மனதிற்கும், உடலுக்கும் காரக கிரகமாக சந்திரன் உள்ளது. சூரியனின் அடிப்படையில் நமக்கு லக்னமும், சந்திரனின் அடிப்படையில் ராசியும் அமைகிறது. நீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தை தீர்மானிக்கும் கிரகமாக சந்திரன் உள்ளார். கடக ராசியில் ஆட்சி பலம் கொண்ட சந்திர பகவான் விருச்சிகம் ராசியில் நீசம் அடைகிறார். குறிப்பாக விசாக நட்சத்திரம் 4ஆம் பாதத்தில் சந்திரன் பரம நீசம் அடைகிறார்.
இது போன்ற போட்டோக்கள்
May 19, 2025 10:03 AMஉங்களுக்கு ரோகிணி நட்சத்திரமா? கல்வி முதல் தொழில் வரை! அனைத்து தகவல்களும் உள்ளே!
May 19, 2025 09:10 AMநியூமராலஜி பலன்கள்: பண விஷயத்தில் உஷாரா இருங்க.. இன்று மே 19 உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்க ராசி பலன் என்ன சொல்லுது?
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
வளர்பிறை, தேய்பிறைக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்
அதே வேளையில் அவர் புஷ்கர நவாம்சத்திற்கு செல்வது விஷேஷமான அமைப்பாக பார்க்கப்படுகிறது. பொதுவாக இரு ஜாதகத்தில் சந்திரன் நீசம் பெற்றால் ஜாதகர் மனநிலை குன்றியவராக இருப்பார் என்று சொன்னாலும், நீசம் பெற்ற சந்திரன் வளர்பிறையில் உள்ளாரா அல்லது தேய்பிறையில் உள்ளாரா என்பதற்கு ஏற்ப பலன்கள் மாறுபடலாம்.
சந்திரன் நீசபங்கம் அடைவது எப்படி?
இதுமட்டுமின்றி சந்திரனுக்கு குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் பார்வை நீச பங்கத்தை கொடுத்துவிடும். குறிப்பாக மீனத்தில் அமர்ந்த குரு, ரிஷபத்தில் அமர்ந்த சுக்கிரன் ஆகியோர் விருச்சிகம் ராசியை பார்த்தால் சந்திரன் நீசம் பங்கம் பெறுவார். இதுமட்டுமின்றி செவ்வாய் உச்சம் மற்றும் ஆட்சி பெற்றாலும் சந்திரனுக்கு நீச பங்கம் கிடைத்துவிடும்.