தமிழ் செய்திகள்  /  Astrology  /  Aditya Mangal Yogam Formed On February 5, 2024

Aditya Mangal Yogam: விரைவில் உருவாகும் ஆதித்ய மங்கள யோகம்.. உச்சம் பெறப்போகும் 3 ராசிகள்!

Karthikeyan S HT Tamil
Jan 22, 2024 12:46 PM IST

Aditya Mangal Yogam 2024: ஆதித்ய மங்கள யோகத்தால் உச்சம் பெறப்போகும் 3 ராசிகள் பற்றி பார்ப்போம்.

ஆதித்ய மங்கள யோகம் 2024
ஆதித்ய மங்கள யோகம் 2024

ட்ரெண்டிங் செய்திகள்

நெருப்பு கிரகமான சூரிய பகவான் ஒரு செயலை செய்யும் எண்ணத்தைக் கொடுப்பவராகவும், செவ்வாய் பகவான் அந்த செயலை செய்து முடிக்க கூடிய வல்லமை தரக்கூடியவராக இருப்பவர். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் ஆதித்ய மங்கள யோகம் உருவாகப் போகிறது. இந்த யோகத்தின் பலனாக, மேஷம், ரிஷபம், சிம்மம் ஆகிய மூன்று ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் சூழல் அமைய உள்ளது.

மேஷ ராசியினருக்கு இந்த ஆதித்ய மங்கள யோகம் மிகவும் நன்மை பயக்கும். தொழிலில் வெற்றி உண்டு. பொருளாதார நிலை உயர வாய்ப்புக்கள் உருவாகும். புதிய சாதனைகளை படைப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

ஆதித்ய மங்கள யோகத்தால் ரிஷப ராசியினருக்கு கல்வித்துறையில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் சென்று வரக்கூடிய வாய்ப்பு உண்டு. சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்ம ராசியினருக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டு. உங்களின் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. குழந்தைகளினஅ செயல்பாடு மகிழ்ச்சியை தரும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்