தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Tips: உங்க அதிர்ஷ்டம் யாருக்கும் போக கூடாதா.. இந்த பொருள்களை யாருக்கும் மறந்தும் கொடுக்காதீர்கள்!

Vastu Tips: உங்க அதிர்ஷ்டம் யாருக்கும் போக கூடாதா.. இந்த பொருள்களை யாருக்கும் மறந்தும் கொடுக்காதீர்கள்!

Aarthi Balaji HT Tamil
May 07, 2024 01:56 PM IST

Vastu Tips: வாஸ்து படி சில விஷயங்களை ஒருவரிடமிருந்து ஒருவர் எடுத்து கொள்வது நல்லதல்ல. உங்கள் முன்னேற்றம், நிதி நிலை, ஆரோக்கியம் ஆகியவற்றை அது மோசமான வகையில் பாதிக்கும். அதனால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாத விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

வாஸ்து
வாஸ்து (Freepik)

வாஸ்து படி சில விஷயங்களை ஒருவரிடமிருந்து ஒருவர் எடுத்து கொள்வது நல்லதல்ல. உங்கள் முன்னேற்றம், நிதி நிலை, ஆரோக்கியம் ஆகியவற்றை அது மோசமான வகையில் பாதிக்கும். அதனால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாத விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

நகைகள்

நேர்மறை ஆற்றலை வழங்குவதில் நகைகள் மற்றும் ரத்தினங்களின் முக்கியத்துவம் பற்றி ஜோதிடர்கள் பேசுகின்றனர். ஆபரணங்களை உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ கொடுத்தால், செல்வம் அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு சமம்.

வாசனை திரவியம்

யாருக்கும் பெரிபூம் பரிசளிக்க வேண்டாம், அதே போல் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வாசனை திரவியம் உங்கள் ஆளுமையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறது. இது போன்ற ஒன்றைப் பகிர்வது உங்கள் நல்ல அதிர்ஷ்டத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது போன்றது.

பிரேஸ்லெட்

துரதிர்ஷ்டம் மற்றும் எதிர்மறைக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையாக பலர் பிரேஸ்லெட் பயன்படுத்துகின்றனர். உங்கள் பிரேஸ்லெட் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால், அது உங்கள் அதிர்ஷ்டத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது போலாகும்.

பேனா

வாஸ்து படி பேனா, கொடுக்கவோ எடுக்கவோ கூடாது. கடன் வாங்கிய பேனாவை உங்களிடம் வைத்திருப்பது நல்லது கிடையாது என்று கூறப்படுகிறது. இதனால் எங்களது நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்படும் என்கின்றனர்.

காலாணி

ஜோதிட நம்பிக்கைகளின் படி ஷூ அல்லது செருப்பை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஜோதிட சாஸ்திரப்படி யாருக்கும் செருப்பு கொடுக்க கூடாது. சனி பகவான் காலணி மற்றும் செருப்புகளில் இருப்பதாக நம்பப்படுகிறது. 

ஒருவருக்கொருவர் செருப்பு மற்றும் காலணிகளை அணிவது சனி தோஷத்தைத் தூண்டும் என்று நம்பப்படுகிறது. இது உங்கள் வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் காலணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது வறுமை மற்றும் நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கிறது.

செடி

வீட்டு தாவரங்கள் ஆற்றலை மேம்படுத்துகின்றன மற்றும் காற்றை சுத்தப்படுத்துகின்றன. தாவரங்கள் நல்ல அதிர்ஷ்டத்தை தரும். இவற்றைப் பிறருக்குப் பரிசளிப்பது உங்கள் வீட்டில் உள்ள ஆற்றலைக் கொடுப்பது போன்றது. அதைக் கொடுப்பது அதில் உள்ள நல்ல ஆற்றலைக் கைவிடுவதாகவும் இருக்கலாம்.

தலையணை

உங்கள் ஆற்றலை தக்க வைத்துக் கொள்ள, இரவு முழுவதும் நன்றாகத் தூங்குவது அவசியம். நாம் நன்றாக தூங்குவதற்கு தலையணை மிகவும் முக்கியமானது. அத்தகைய தலையணையை வேறு யாராவது பயன்படுத்தினால் உங்கள் அதிர்ஷ்டம் மற்றவர்களுக்குப் பரவும். அதனால் யாருக்கும் கொடுக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்