வாஸ்து டிப்ஸ்: லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் பெற வேண்டுமா.. துளசி செடிக்கு அருகில் இந்த 3 பொருட்கள் வைத்து பாருங்க
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வாஸ்து டிப்ஸ்: லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் பெற வேண்டுமா.. துளசி செடிக்கு அருகில் இந்த 3 பொருட்கள் வைத்து பாருங்க

வாஸ்து டிப்ஸ்: லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் பெற வேண்டுமா.. துளசி செடிக்கு அருகில் இந்த 3 பொருட்கள் வைத்து பாருங்க

Aarthi Balaji HT Tamil
Published Apr 18, 2025 12:10 PM IST

வாஸ்து டிப்ஸ்: லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களை பெற வீட்டில் இருக்கும் துளசி செடிக்கு அருகில் சில பொருட்களை வைத்தால் நிதி பிரச்னை வராது என்று சொல்லப்படுகிறது.

வாஸ்து டிப்ஸ்: லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் பெற வேண்டுமா.. துளசி செடிக்கு அருகில் இந்த 3 பொருட்கள் வைத்து பாருங்க
வாஸ்து டிப்ஸ்: லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் பெற வேண்டுமா.. துளசி செடிக்கு அருகில் இந்த 3 பொருட்கள் வைத்து பாருங்க

இது போன்ற போட்டோக்கள்

லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களைப் பெற பல்வேறு பரிகாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இதனிடையே லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களை பெற வீட்டில் இருக்கும் துளசி செடிக்கு அருகில் சில பொருட்களை வைத்தால் நிதி பிரச்னை வராது என்று சொல்லப்படுகிறது.

துளசி செடி

ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் துளசி செடி வளர்க்கப்படுகிறது. துளசி செடி ஒரு புனிதமான தாவரமாக கருதப்படுகிறது மற்றும் லட்சுமி தேவி என்று வணங்கப்படுகிறது. அதனால் தான் அந்த காலத்தில் இருந்து ஒவ்வொரு வீட்டிலும் ஒரு துளசி செடி உள்ளது.

ஒவ்வொரு நாளும், துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி, செடியின் முன் தீபாராதனம் செய்யப்படுகிறது. ஆனால் தண்ணீர் ஊற்றி துளசி செடியின் முன் தீபாராதனை செய்தால் மட்டும் லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைய மாட்டார். அவரின் முழு ஆசீர்வாதத்தையும் பெற ஒரு சில வழிகள் இருக்கிறது.

துளசி செடிக்கு அருகில் வைக்க வேண்டியவை


சாளக்கிராமம்

துளசி செடிக்கு முன் சாளக்கிராமம் வைப்பதன் மூலம் பிரச்னைகள் நீங்கும். விஷ்ணுவுக்கு துளசி பிடிக்கும். சாளக்கிராமம் என்பது விஷ்ணுவின் வடிவம். துளசி செடிக்கு அருகில் சாளக்கிராமத்தை வைத்திருப்பது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும், மேலும் பணத்திற்கு பஞ்சம் இருக்காது.

மஞ்சள்

மஞ்சளை, துளசி செடிக்கு அருகில் வைக்கவும் அல்லது மஞ்சள் நீரை துளசி செடிக்கு அருகில் வைக்கலாம். ஒவ்வொரு வியாழக்கிழமையும் நீங்கள் துளசி செடிக்கு மஞ்சள் நீரை ஊற்றினால், அது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். மேலும் நிதி சிக்கல்கள் இருக்காது.

கோமதி சக்கரம்

கோமதி சக்கரத்தை துளசி செடிக்கு அருகில் வைப்பதன் மூலம், நேர்மறை ஆற்றல் பரவுகிறது, எதிர்மறை ஆற்றல் அகற்றப்படுகிறது. நிதி சிக்கல்கள் தீர்ந்து பணத்திற்கு பஞ்சம் இருக்காது. உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

மேற்கூறியவை எந்த நிதி சிக்கல்களையும் ஏற்படுத்தாது. நீங்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ உதவும். பாசிட்டிவ் எனர்ஜியும் பரவும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இவை துளசி செடிகளுக்கு அருகில் வைக்கப்பட்டால் நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் கொண்டு வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.