Nakshatra Horoscope: பிறப்பிலேயே போலி நபர்களை கண்டுபிடிப்பதில் இந்த நட்சத்திரங்கள் கில்லாடி.. யார் அவர்கள்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Nakshatra Horoscope: பிறப்பிலேயே போலி நபர்களை கண்டுபிடிப்பதில் இந்த நட்சத்திரங்கள் கில்லாடி.. யார் அவர்கள்?

Nakshatra Horoscope: பிறப்பிலேயே போலி நபர்களை கண்டுபிடிப்பதில் இந்த நட்சத்திரங்கள் கில்லாடி.. யார் அவர்கள்?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 11, 2025 04:39 PM IST

Nakshatra Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின் படி பிறந்த ராசி அல்லது நட்சத்திரத்தின் காரணமாக ஒரு சிலர் போலிமுகம் கொண்டவர்களை எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். அந்த வகையில் ஆபத்தான நபர்களை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கக்கூடிய நட்சத்திரக்காரர்கள் குறித்து இங்கு காணலாம்.

Nakshatra Horoscope: பிறப்பிலேயே போலி நபர்களை கண்டுபிடிப்பதில் இந்த நட்சத்திரங்கள் கில்லாடி.. யார் அவர்கள்?
Nakshatra Horoscope: பிறப்பிலேயே போலி நபர்களை கண்டுபிடிப்பதில் இந்த நட்சத்திரங்கள் கில்லாடி.. யார் அவர்கள்?

இது போன்ற போட்டோக்கள்

அதில் ஒரு சிலர் போலியான நபர்களை கண்டுபிடிப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி பிறந்த ராசி அல்லது நட்சத்திரத்தின் காரணமாக ஒரு சிலர் போலிமுகம் கொண்டவர்களை எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். அந்த வகையில் ஆபத்தான நபர்களை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கக்கூடிய நட்சத்திரக்காரர்கள் குறித்து இங்கு காணலாம்.

அனுஷம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் சிறப்பான உள்ளுணர்வை கொண்டவர்களாக திகழ்ந்த வருகின்றார்கள் ஒரு புத்தகத்தைப் போல மற்றவர்களின் மனதைப் படிக்கக்கூடிய திறமை கொண்டவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள் ஒருவருடைய பழக்கத்தில் அல்லது பார்க்கும் பொழுது எளிதில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.

இவர்களின் உள்ளுணர்வு அதிகபட்சம் உண்மையை கூறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூர்மையான அறிவு மற்றும் தெளிவான சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு விஷயத்தை ஆராய்ந்து வெளிக்கொணரக்கூடிய திறமை கொண்டவர்கள். வஞ்சத்தை கண்டறியும் திறமை இவர்களிடம் எப்போதும் இருப்பதாக கூறப்படுகிறது.

உத்திராடம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை தீவிரமாக ஆராய்ச்சி செய்து ரகசியங்களை கண்டுபிடிக்கக்கூடிய திறமை கொண்டவர்களாக திகழ்ந்து வருகின்றார்கள். இயற்கையாகவே எந்த விஷயத்தையும் ஆடம்பரச் சென்று ஆராய கூடிய திறமை கொண்டவர்களாக இவர்கள் திகழ்ந்து வருகின்றார்கள்.

குறிப்பாக தொலைநோக்கு பார்வை மற்றும் விரிவான அறிவு, திறமை இருக்கின்ற காரணத்தினால் முரண்பாடுகளை விரைவில் களைந்து அதிலிருந்து உண்மையை கண்டறியக்கூடிய திறமை கொண்டவர்களாக இவர்கள் திகழ்ந்து வருகின்றார்கள். நேர்மையில் இவர்களுக்கு தெளிவான புரிதல் இருக்கின்ற காரணத்தினால் விரைவில் போலி நபர்களை கண்டுபிடிக்கும் திறமை வாய்ந்தவர்களாக இவர்கள் விளங்குவார்கள் என கூறப்படுகிறது.

பூரட்டாதி நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அதிக இரக்கம் கொண்ட நபர்களாக திகழ்ந்தவர்கள். அதிக உள்ளுணர்வு கொண்டவர்களாக திகழ்ந்து வரும் இவர்கள் வெளி உலகத்தோடு அதிக தொடர்பாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. நுட்பமான அறிவு கொண்டிருக்கின்ற காரணத்தினால் எதிரில் இருப்பவர்களின் நேர்மையை எளிதில் இவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என கூறப்படுகிறது.

யாராவது இந்த நட்சத்திரக்காரர்களை பயன்படுத்திக் கொள்ளவோ அல்லது ஏமாற்ற நினைத்தால் உடனடியாக இவர்கள் அறிந்து விடுவார்கள் என கூறப்படுகிறது. மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளும் திறன் இவர்களிடம் இருக்கின்ற காரணத்தினால் விரைவில் போலியான நபர்களை இவர்கள் கண்டுபிடிப்பார்கள் என கூறப்படுகிறது.

அஸ்தம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூர்மையாக கவனம் செலுத்தும் திறமை கொண்டவர்களாக திகழ்ந்து வருகின்றார்கள். சின்னஞ்சிறிய விஷயமாக இருந்தாலும் அதனை பலமுறை பகுப்பாய்வு செய்யக்கூடிய திறமை இவர்களுக்கு இயற்கையாகவே உண்டு என கூறப்படுகிறது.

இவர்களின் கடினமான அணுகுமுறை காரணமாக போலி நபர்களை எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் என கூறப்படுகிறது. எதார்த்தமான சிந்தனை மற்றும் கூர்மையான அறிவுத்திறன் கொண்டவர்களாக இருக்கின்ற காரணத்தினால் இவர்கள் போலி நபர்களை எளிதில் வெளிப்படுத்தி விடுவார்கள் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

 

Suriyakumar Jayabalan

TwittereMail
ஜெ. சூரியகுமார், 2019ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இளங்கலை வணிகவியல், இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் ஆன்மீகம், சினிமா, புகைப்படத்தொகுப்பு, வீடியோ சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இசை கேட்பது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைதல் இவரது பொழுது போக்கு
Whats_app_banner