Akshaya Tritiya: அட்சய திரிதியைக்கு தங்கம் வாங்குவது சரியா..? ஜோதிடர் சொல்வது என்ன? - முழு விவரம் உள்ளே
Akshaya Tritiya: அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க வேண்டும் என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை என ஜோதிடர் கூறுகிறார்.

சித்திரை மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாள் ‘அட்சய திரிதியை’ திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் புதன்கிழமை (சித்திரை 17) ‘அட்சய திரிதியை’ வருகிறது. ‘அட்சய திரிதியை’ என்றால் உடனே அனைவரது நினைவுக்கும் வருவது தங்கம் தான். காரணம் ‘அட்சய’ என்றால் பெருகக் கூடியது என்று பொருள்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
இஸ்ரோ ராக்கெட்டும், தங்கம் விலையும்
அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்று மக்கள் நம்புகிறார்கள். இதனால் அட்சய திரிதியையன்று நகைக்கடைகளில் ஈக்கள் மொய்ப்பதை போல் கூட்டம் அலைமோதும். அவரவர் சக்திக்கேற்ப தங்கம் வாங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலைக்கு குண்டுமணி தங்கம் வாங்குவதே குதிரை கொம்பாக இருக்கிறது. இஸ்ரோ ராக்கெட்டை விட தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது தான் இதற்கெல்லாம் காரணம்.
அட்சய திரிதியை நாளில் என்ன செய்யலாம்
அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க வேண்டும் என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. இடைச்செருகலாக வந்த சம்பிரதாயம் தான் தங்கம் வாங்கும் விஷயம். உண்மையை போட்டு உடைக்க வேண்டும் என்றால் அட்சய திரிதியை நாளில் முன்னோர்களுக்கு (பிதுர்கள்) தர்ப்பணம் செய்வது மிகுந்த பலனை தரும்.
புனித நீராடிவிட்டு கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது, இல்லாதவர்களுக்கு இயன்ற அளவுக்கு தானம் செய்ய வேண்டும். குறிப்பாக அன்னதானம் செய்வது சிறப்பு.
பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன், மகாலட்சுமியை வணங்கி செல்வத்தை பெற்ற தினம் என்பதால், அட்சய திரிதியை நாளில் லட்சுமி பூஜை, குபேர பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். தங்கம் குரு பகவானை குறிக்கும் ஆபரணம். வெள்ளி சுக்கிரனை குறிக்கும்.
தான தர்மங்கள் போதும்
நவக்கிரகங்களில் சுக்கிரன் மகாலட்சுமி அம்சம். அதனால் அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்குவதை விட சிறந்தது வெள்ளி தான். ஒரு கிராம் வெள்ளி வாங்கிலும் போதும். வெள்ளி பொருட்களுடன் கல் உப்பு, பச்சரிசி, மல்லிப்பூ வாங்கி சுக்கிர ஹோரையில் பூஜை அறையில் மகாலட்சுமி படத்திற்கு முன்பு வைத்து மனதார வணங்கினால் போதும் ஐஸ்வர்யம் சேரும். முடிந்தால் இயன்ற அளவுக்கு தான தர்மங்கள் செய்தால் போதும் மகாலட்சுமி மனம் குளிர்ந்து ஐஸ்வர்யத்தை அள்ளி தருவாள்.
தங்கம் வாங்க வேண்டும் என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. இடைச்செருகலாக வந்த சம்பிரதாயம் தான் தங்கம் வாங்கும் விஷயம். அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்குவதை விட சிறந்தது வெள்ளி தான்.
ஜோதிட சிரோன்மணி ஆர்.கே.வெங்கடேஸ்வர்
astrovenkataeswar@gmail.com
91590 13118
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்