யாருக்கு எந்த விரலால் திலகம் இடவேண்டும்? இந்து பாரம்பரியத்தின்படி அவற்றின் பொருள் என்ன?
யாருக்கு எந்த விரலால் திலகம் இடவேண்டும் என்பது பற்றியும், இந்து பாரம்பரியத்தின்படி அவற்றின் பொருள் என்ன என்பது குறித்தும் பார்ப்போம்.
முகத்தில் பொட்டு இருப்பது ஒருவரை மிகவும் அழகாகக் காட்டுகிறது மற்றும் பொட்டு வைப்பவர்களுக்கு, இந்து கலாசாரத்தில் நிறைய மரியாதை இருக்கிறது.
நெற்றியில் திலகம் இட்டவரைப் பார்க்கும்போது நன்றாக இருக்கும். இது ஒரு அடையாளம் மட்டுமல்ல, இது பாதுகாப்பு, நேர்மறை மற்றும் தைரியத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு விரலாலும் திலகம் இட்டாலும் அதன் ஒவ்வொன்றுக்கும் தனி அர்த்தம் உண்டு. உதாரணமாக, ஒருவர் வெற்றி பெற விரும்பினால், கட்டை விரலை வைத்து ஒரு திலகம் வைக்கப்படுகிறது. ஆனால், இது சிறியதாகவும் நீளமாகவும் வைக்கப்படுகிறது.
கட்டை விரலால் திலகம் இடுவதன் மூலம், அதிகாரத்தையும் வெற்றியையும் விரும்புவது போன்றது ஆகும். இதற்கு வீரத்திலகம் என்று பெயர். பண்டைய காலங்களில், போர்களுக்குச் செல்லும்போது, கட்டை விரலால் நெற்றியில் திலகம் இடப்படுவது வழக்கம்.
மோதிர விரலில் திலகமிடுவது பற்றி:
தெய்வங்களை வழிபடும்போது, தெய்வங்களின் சிலைகளுக்கு பொட்டு அல்லது திலகம் அணிவிக்கப்படுகிறது. நாமும் திலகம் அணிகிறோம். தெய்வங்களின் சிலைகள் அல்லது உருவப்படங்களுக்கு திலகம் போடும்போது மோதிர விரல் பயன்படுத்தப்படுகிறது. இது பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாகும். தெய்வீக நபர்களுக்கு ஆன்மிக அன்பர்களுக்கு திலகம் கொடுக்கும் போது, மோதிர விரல் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
பூஜை செய்யும் போதும், வெளியே செல்லும்போதும் நீங்கள் பொட்டு வைத்துக்கொண்டால் கடவுளுக்கு வணக்கம் செலுத்துகிறீர்கள் என்று அர்த்தம். இதைச்செய்வது நல்லது, கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்கும், நீங்கள் மோதிர விரலைப் பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் அடுத்தவரின் நெற்றியில் திலகம் வைக்கும்போதும், மோதிர விரலைப் பயன்படுத்த வேண்டும். இது புத்திசாலித்தனம், மன ஆரோக்கியம் மற்றும் ஞானத்தின் சக்கரமான கட்டளை சக்கரத்தை செயல்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது. வேறொருவரின் நெற்றியில் திலகம் இடுவதன் மூலம், அவர்கள் அமைதி, முழுமை மற்றும் கடவுளுக்கு நெருக்கமான உணர்வை உணர்கிறார்கள். கணவன் - மனைவிக்கு இடும்போதும் மோதிர விரலால் தான் திலகம் இடவேண்டும்.
ஆட்காட்டி விரலை எங்கு பயன்படுத்த வேண்டும்?:
இறந்தவர்கள் மற்றும் முன்னோர்களின் புகைப்படங்களுக்கு ஒரு மாலை போடுகிறார்கள். இறந்த நபரின் மீதோ அல்லது அவரது உருவப்படத்தின் மீதோ பொட்டு வைக்கும்போது, ஆள்காட்டி விரலைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.
உயிருடன் இருப்பவரின் நெற்றியில் திலகம் இடும்போது தவறுதலாக கூட ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தக் கூடாது, ஏனெனில் இறந்த நபரின் மீது புள்ளி வைக்கும்போது மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது. ஆள்காட்டி விரல் மோட்சத்துடன் தொடர்புடையது. இறந்தவரின் மீது ஒரு துளி திலகத்தை ஆள்காட்டி விரல் மூலம் இடுவதன் மூலம், அவர்களின் ஆன்மா சரியான இரட்சிப்பின் பாதையில் செல்லும். அதனால்தான் எந்த விரலால் திலகம் இடுவது என்பது மிகவும் முக்கியம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். ஆன்மிகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
டாபிக்ஸ்