Omens: நாயின் செயல்பாடுகள் சொல்லும் சகுனங்கள் இதுதான்!
நாய்களின் செயல்பாடுகள், மனிதனுக்கு எந்த வகையில் நன்மை தருகின்றன என்பதை சகுன சாஸ்திரம் இக்கட்டுரையில் கூறலாம்
நாய்
சகுன சாஸ்திரத்தில், நாம் வெளியில் செல்லும்போது பூனை குறுக்கிட்டால், போகும் பணியில் தடை ஏற்படலாம் எனக் கூறுகிறது. இந்நிலையில் பைரவரின் வாகனமாகிய நாய் எங்கெங்கு குறுக்கிட்டால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
- சகுன சாஸ்திரத்தின்படி, குட்டி நாய் இந்த கணக்கில் வராது. அதாவது நாம் பார்க்கும்நாயின் வயது மூன்று வயதைக் கடந்து இருந்திருந்தால் மட்டுமே, சகுன சாஸ்திரம் பேசும்.
- உங்கள் ஜாதகத்தின்படி, நீங்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று விதி இருக்கும்போது, யதார்த்தமாக நாய் கடித்துவிட்டால், அந்தச் சிக்கலில் இருந்து தப்பிவிடுவீர்கள் எனக் கூறுகிறது, சகுன சாஸ்திரம். இருப்பினும், நாய்க்கடிக்கு வைத்தியம் பார்க்காமல் இருந்துவிடாதீர்கள்.
- நீங்கள் ஒரு காரியத்தில் வெற்றியாகவேண்டும் என நினைத்துச் செல்லும்போது, நாய் 7 முறை குரைத்தால் காரியம் வெற்றிபெறும் என்றும், அதற்கும் மேலோ அல்லது கீழாகவோ குரைத்தால் தோல்வியுறும் என்றும் சகுன சாஸ்திரம் கூறுகிறது.
- அதேபோல் நீங்கள் பார்க்கும் நாய் கட்டப்பட்டு குரைத்தால் இந்தச் சகுனம் எல்லாம் பொருந்தாது எனக் கூறப்பட்டுள்ளது.
- நாய் வால் ஆட்டினால், நாம் செல்லும் செயல் நன்மையில் முடியும்.
- ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கும்போது நாம் எண்ணிய காரியம் வெற்றிபெறுமா இல்லையா என நினைத்துக் கொண்டிருக்கும்போது, நாயின் படத்தை எங்காவது பார்த்தால் கட்டாயம் வெற்றி தான் என சகுன சாஸ்திரம் சொல்கிறது.
- தொலைக்காட்சி, அலைபேசி, புத்தகம் என எந்தவொரு சாதனங்கள் மூலமாவது, நீங்கள் நாயினைப் பார்த்தாலும் உங்களுக்கு வெற்றிகிடைக்கப்போகிறது என்றுதான் பொருள்.
- நீங்கள் திருமணத்திற்கு பெண்பார்க்கச் செல்லும்போது, கூட்டமாக நாய்கள் குரைக்காமல் இருந்து விளையாடிக்கொண்டு இருந்தால் பெண் அமைந்துவிடும் என்கிறது, ஆருடம்.
- அதேபோல், நீங்கள் கடனை வசூலிக்க செல்கையில் இருநாய்கள் காதல் கொண்டிருந்தால், வாராக்கடன்கூட வந்துவிடும் என்கிறது, சகுன சாஸ்திரம்.
- நாய் தன் குட்டியுடன் எதிரில் வருகிறது என்றால், நீங்கள் வெகுநாட்களாக வாங்க நினைத்த பொருட்களை கட்டாயம் வாங்கிவிடுவீர்கள் என்று அர்த்தம்.
- வீட்டில் விரும்பி வளர்க்கும் நாய் நன்றாக இருந்தால், உங்கள் வீடு எப்போதும் வறுமையின் பிடியில் சிக்காதாம்.
- அதே நாய் அடிக்கடி நம் வீட்டு உத்திரத்தைப் பார்த்தாலோ,சரியாக சாப்பிடாமல் இருந்தாலோ, வித்தியாசமாக குரைத்தாலோ நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
- அதேபோல், நீங்கள் வளர்த்த செல்லநாய் உங்கள் பேச்சைக் கேட்க மறுத்தால், உங்களுக்கு சோதனைமிக்க காலம் வரப்போகிறது என்று அர்த்தம்.
- அதேபோல், நீங்கள் வளர்த்த நாய், உங்களை விட்டுச் சென்றுவிட்டால் கடனாளி ஆகப்போகிறீர்கள் என்று பொருள் என சகுன சாஸ்திரம் கூறுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஜோதிடம், கிரகப் பெயர்ச்சி, கோயில்கள், வாஸ்து சாஸ்திரம், திருவிழாக்கள், ராசி பலன்கள் பற்றிய கட்டுரைகளை இந்தப் பிரிவில் படிக்கலாம்.