தமிழ் செய்திகள்  /  Astrology  /  A Deep Dive Into Vidyut Yoga And Astrological Influences

Vidyut Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை’ வாழ்கையை திருப்பி போடும் வித்யுத் யோகம் யாருக்கு?

Kathiravan V HT Tamil
Mar 04, 2024 02:26 PM IST

”லக்னத்திற்கு லாபாதிபதி என்று சொல்லப்படக்கூடிய 11ஆம் அதிபதி உடன் குரு அல்லது சுக்கிரன் இணைந்து லக்ன கேந்திரத்திலோ அல்லது லக்னாதிபதிக்கு கேந்திரத்திலோ இருக்க வேண்டும்”

வித்யுத் யோகம்
வித்யுத் யோகம்

ட்ரெண்டிங் செய்திகள்

லக்னத்திற்கு லாபாதிபதி என்று சொல்லப்படக்கூடிய 11ஆம் அதிபதி உடன் குரு அல்லது சுக்கிரன் இணைந்து லக்ன கேந்திரத்திலோ அல்லது லக்னாதிபதிக்கு கேந்திரத்திலோ இருக்க வேண்டும். 

மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் லக்னத்திற்கு குரு பகவானும், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானும் சுபராக வரக்கூடியவர்களாக உள்ளனர். 

வித்யுத் யோகத்தால், அதிஅற்புத அரசாலும் தகுதி, அரசுவேலை, நிதிநிறுவனங்களை நடத்துதல், நிதி நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை பெறுவது, குலதர்மம் காப்பது, அறக்கட்டளைகளை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவர். 

லக்னத்திற்கு 11ஆம் இடம் என்பது பராக்கிரம ஸ்தானம் எனப்படுகிறது. இந்த யோகம் கொண்டவர்களுக்கு, செல்வம், செழிப்பு, வளம், ஆடம்பரமான வாழ்க்கை, நல்ல கல்வி, ஞானம், சமூகத்தில் மதிப்பு, புகழ், அரசாங்கத்தால் ஆதரவு, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, பிள்ளைகள் வழியில் நன்மைகள் ஆகியவை கிடைக்கும். இதில் 11ஆம் அதிபதி மற்றும் குரு பகவான், சுக்கிரன் ஆகியோரது பலம் குறைந்தால் இந்த யோகம் மூலம் கிடைக்கும் பலனும் குறையும். வித்யுத் யோகம் குறித்த முழு பலனை அறிய உங்கள் சுய ஜாதகத்தை ஜோதிடரிடம் ஆய்வு செய்யவும். 

WhatsApp channel

டாபிக்ஸ்