Tamil News  /  Astrology  /  9 Weeks Of Sai Baba Fasting
சாய் பாபா
சாய் பாபா

Sai Baba: சாய் பாபாவுக்கு 9 வியாழக்கிழமை விரதம் இருந்தால் என்ன நடக்கும்.. விரதம் எடுக்கும் முறை என்ன?

25 May 2023, 12:38 ISTAarthi V
25 May 2023, 12:38 IST

9 வாரம் சாய் பாபாவின் விரதத்தை எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

சாய் பாபாவை இந்த மதம் சார்ந்தவர்கள் தான் வழிபாடு செய்ய வேண்டும் என்ற எந்த விதியும் கிடையாது. அவர் அன்பு, சகிப்புத்தன்மை, மனநிறைவு, தொண்டு மற்றும் உள் அமைதி ஆகியவற்றை கொடுக்க கூடியவர்.

சாய் பாபாவிற்கு 9 வாரம் விரதம் இருந்தால் நினைத்த விஷயம் நடக்கும் என்பது ஐதீகம். ஒருவர் தொடர்ந்து ஒன்பது வியாழக்கிழமைகளில் விரதம் அல்லது விரதம் கடைப்பிடித்தால், அந்த நபர் சாய் பாபாவால் ஆசீர்வதிக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது. இந்த வியாழன் விரதத்தால் சாய் பாபா பக்தர்கள் பலன் அடைவதாக கூறப்படுகிறது. இது ஒரு எளிய விரதம் மற்றும் மிகவும் கடினமான தவம் இருக்க வேண்டும் என்று தேவையில்லை.

9 வாரம் சாய் பாபாவின் விரதத்தை எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

இந்த விரதத்தை எந்த ஜாதி, மத வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். 9 வார விரதத்தை முதலில் வியாழன் அன்று தான் தொடங்க வேண்டும். அதன் பிறகு தொடர்ந்து ஒன்பது வியாழன் விரதம் இருக்க வேண்டும். வெறும் வயிறாக இந்த விரதம் எடுக்க கூடாது.

பழங்கள், பால் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள், ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு எடுத்து கொள்ளலாம். முடிந்தால் வியாழன் அன்று சாயி கோவிலுக்கு சென்று வாருங்கள். வீட்டில் காலையிலும், மாலையிலும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

வீட்டில் மஞ்சள் துணி வைத்து அதற்கு மேல் சாய் பாபாவின் சிலை அல்லது படத்தை வைக்கவும். சிலை அல்லது படத்தின் நெற்றியில் சிறிது குங்குமம், மலர் மாலைகள் மற்றும் பழங்களை வைக்க வேண்டும். சாய் பாபாவின் புத்தகத்தை படித்து, அதை முடித்த பிறகு, தெய்வத்திற்கு வழங்கப்படும் உணவை வைக்க வேண்டும். அல்லது பால் வைத்துவிட்டு, பூஜை முடிந்த பிறகு நீங்கள் மட்டுமே அந்த பாலை குடிக்க வேண்டும்.

ஒன்பதாம் வியாழன் அன்று 5 ஏழைகளுக்கு உணவளிக்கவும். இதற்கு இடையில் பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் காரணமாக ஒரு ஒரு வாரம் விரதத்தைத் தவறவிட்டால், அந்த வியாழனைத் தவிர்த்துவிட்டு அடுத்த வாரம் மீண்டும் கணக்கு வைத்து தொடரலாம். மனதார இந்த விரதத்தை கடைப்பிடித்தால் பக்கதர்கள் கேட்கும் அனைத்தையும் சாய் பாபா வழங்குவார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்