தமிழ் செய்திகள்  /  Astrology  /  5 Zodiac Signs That Will Get Lucky With Mars Transiting In Sagittarius

Mars: தனுசு ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய்.. தூள்கிளப்பப் போகும் 5 ராசிகள்

Marimuthu M HT Tamil
Jan 21, 2024 08:27 PM IST

தனுசு ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டம்பெறும் ஐந்து ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

செவ்வாய் பகவான்.
செவ்வாய் பகவான்.

ட்ரெண்டிங் செய்திகள்

சிம்மம்: இந்த ராசிக்கு 5ஆம் ராசியில் செவ்வாயின் சஞ்சாரத்தால், வருவாய் விஷயங்களில் நன்மைகள் கிடைக்கும். சுப விரயம் செய்வீர்கள். உங்கள் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேறு பணிக்கு மாற நினைப்பவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும்.

துலாம்: இந்த ராசியினருக்கு, செவ்வாயின் சஞ்சாரத்தால் புது நட்பு கிடைக்கும். உடன்பிறந்தோரிடம் இருந்து பொருளாதார உதவிகள் கிடைக்கும். உங்களுக்கு ஊதியத்தில் இன்சென்டிவ் கிடைக்கும். இல்லறத்துணையோ, காதல் துணையோ பேச்சுவார்த்தையில் எச்சரிக்கையுடன் இருங்கள்.

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு, செவ்வாயின் சஞ்சாரத்தால், விரயச் செலவுகள் அதிகரிக்கும். அதைச் சமாளிக்கும் வருவாயும் கிடைக்கும். அவசரப்படாமல் நிதானமாக எந்த செயலையும் திட்டமிட்டு செய்தால் வெற்றிபெறலாம்.

தனுசு: இந்த ராசியினருக்கு, செவ்வாயின் பெயர்வால் பணியிடத்தில் பிரஷர் இருக்கும். இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருந்தீர்கள் என்றால் லாபம் கிடைப்பது உறுதி. வண்டி, மனை வாங்க வாய்ப்பு அமைந்துள்ளது.

கும்பம்: இந்த ராசியினருக்கு, செவ்வாயின் பெயர்ச்சியால் பல்வேறு வழிகளில் லாபம் கிடைக்கும். இல்வாழ்க்கைத் துணையுடன் தாம்பத்திய ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் துறையினருக்குக் கூடுதல் லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்