மிதுன ராசியில் சேரும் குரு, சந்திரன்.. உருவாகும் கஜகேசரி யோகம்.. அதிர்ஷ்டத்தைப் பெறும் 3 ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மிதுன ராசியில் சேரும் குரு, சந்திரன்.. உருவாகும் கஜகேசரி யோகம்.. அதிர்ஷ்டத்தைப் பெறும் 3 ராசிகள்!

மிதுன ராசியில் சேரும் குரு, சந்திரன்.. உருவாகும் கஜகேசரி யோகம்.. அதிர்ஷ்டத்தைப் பெறும் 3 ராசிகள்!

Marimuthu M HT Tamil Published May 12, 2025 11:23 AM IST
Marimuthu M HT Tamil
Published May 12, 2025 11:23 AM IST

மே 14 ஆம் தேதி குரு மிதுன ராசியில் நுழைகிறார். பின்னர், மே 28 ஆம் தேதி, சந்திரன் மிதுன ராசியில் நுழையும் போது, இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்களுடன் பல மாற்றங்களையும் கொண்டு வரும்

மிதுன ராசியில் சேரும் குரு, சந்திரன்.. உருவாகும் கஜகேசரி யோகம்.. அதிர்ஷ்டத்தைப் பெறும் 3 ராசிகள்!
மிதுன ராசியில் சேரும் குரு, சந்திரன்.. உருவாகும் கஜகேசரி யோகம்.. அதிர்ஷ்டத்தைப் பெறும் 3 ராசிகள்!

இது போன்ற போட்டோக்கள்

மேலும், இந்த மாதம் சில கிரக சேர்க்கைகளையும் நாம் பார்க்கப் போகிறோம். இதன் மூலம், இந்த மாதம் முக்கிய ராஜ யோகங்கள் உருவாகின்றன. வரும் மே 14ஆம் தேதி, குரு பகவான் மிதுன ராசியில் நுழைகிறார். பின்னர், மே 28ஆம் தேதி, சந்திர பகவான், மிதுன ராசியில் நுழைகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது.

கஜகேசரி யோகம் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தருகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்களுடன் பல மாற்றங்களையும் கொண்டு வரும். உங்கள் திட்டமிட்ட பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள். இந்த யோகத்தின் பலன்கள் மே 30ஆம் தேதி வரை சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். இந்த யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்களைத் தரும், என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இப்போது பார்ப்போம்.

குரு மற்றும் சந்திரனால் உருவாகும் கஜகேசரி யோகத்தால் அதிக நன்மைபெறும் ராசிகள்:

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் சுபமானது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமை இப்போது முன்பை விட சிறப்பாக இருக்கும். மேலும் புதிய தொழில்களும் தொடங்குவீர்கள். மேலும், நிதி நிலைமையில் இருக்கும் சிக்கல்கள் தீரும். உங்கள் வருமானம் இரட்டிப்பாகும் வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் பல நன்மைகளை வழங்குகிறது. கஜ கேசரியோகத்தால், நிதி நிலைமைகள் மேம்படும். தொழிலில் இருந்த பிரச்னைகள் தீரும். வங்கி இருப்பு அதிகரிக்கும். வருமானத்தில் மாற்றம் ஏற்படும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் பல மாற்றங்களைக் கொண்டுவரும். தொழிலில் பெரிய லாபத்தை சிம்ம ராசியினர் ஈட்டுவீர்கள்.

இது நிதி ரீதியாகவும் வலுசேர்க்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய சலுகைகள் மற்றும் பதவி உயர்வுகள் கிடைக்கும். இதுவரை முடிக்கப்படாத பணிகள் கூட இந்த காலகட்டத்தில் முடிக்கப்படும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் பல நன்மைகளை வழங்குகிறது. மகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழுங்கள். மீன ராசியினருக்கு, பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் திடீர் நிதி ஆதாயங்களும் கிடைக்கும். மீன ராசிக்காரர்களும் இந்த நேரத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பார்கள்.

பொறுப்பு துறப்பு:-

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.