தமிழ் செய்திகள்  /  Astrology  /  4 Maha Nakshatras Which Are Not Required To See Thirumana Porutham

Thirumana Porutham: ‘இந்த 4 நட்சத்திரங்களுக்கு திருமண பொருத்தம் பார்க்க வேண்டியதில்லை!’ ஏன் தெரியுமா?

Kathiravan V HT Tamil
Mar 13, 2024 06:04 PM IST

“Thirumana Porutham: ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை மகா நட்சத்திரங்கள் எனப்படும் 4 நட்சத்திரங்களுக்கு பொருத்தம் பார்க்க வேண்டியதில்லை என கூறுகிறது”

திருமண பொருத்தம்
திருமண பொருத்தம்

ட்ரெண்டிங் செய்திகள்

மிருகசீரீசம்

மிருக சீரிசம் நட்சத்திரத்தில் பிறந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ நட்சத்திர பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து வைக்கலாம் என்கிறார் ஜோதிடர் சிம்மா. 27 நட்சத்திரங்களில் மிருகசீரிச நட்சத்திரம் கால புருஷனின் 2ஆம் வீட்டையும், 3ஆம் வீட்டையும் இணைக்கும் நட்சத்திரமாக உள்ளது. 

மிருகசீரிசம் நட்சத்திரத்தில் உள்ள உள்ள 4 பாதங்கள் ரிஷப ராசியிலும், மிதுனம் ராசியிலும் உள்ளது. 2ஆம் வீட்டின் அதிபதியாக சுக்கிர பகவானும், 3ஆம் வீட்டின் அதிபதி புதன் பகவானும் உள்ளனர்.  

ஒருவர் குடும்பம் நடத்த பொறுப்பு மிக்கவர்களாக இருப்பது அவசியம். மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொறுப்பு உணர்வு அதிகமாக இருக்கும். மேலும் நல்ல தாம்பத்யம் மற்றும் அன்னியோனியமான வாழ்கைக்கு காதலும், பரஸ்பர நட்பும் இருப்பது அவசியம். காதலுக்கு உரிய கிரகமாக சுக்கிரனும், நட்புக்கு உரிய கிரகமாக புதனும் உள்ளனர். இருவரையும் இணைக்க கூடிய கிரகமாக மிருகசீரிச நட்சத்திரம் உள்ளது. 

மகம்

கால புருஷனுக்கு 5ஆம் வீட்டில் உள்ள நட்சத்திரமான மகம் நட்சத்திரம் கேதுவின் ஆதிக்கம் கொண்டது. இந்த கேதுவின் நட்சத்திரம் சூரியன் வீடான சிம்மத்தில் உள்ளது. சூரியன் என்றாலே ஆளுமை என்று பொருள்படும். ஒரு குடும்பத்தை வெற்றிகரமாக எடுத்து செல்ல கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ ஆளுமை திறன் என்பது அவசியம் ஆகிறது. ஆளுமை நிறைய நட்சத்திரங்களில் முதன்மையான நட்சத்திரமாக மகம் நட்சத்திரம் உள்ளது. 

ஆளுமை திறன் அதிகம் கொண்டதால் யாரை திருமணம் செய்தாலும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல் வாழ்கை துணையை மாற்றும் சக்தி மகம் நட்சத்திரத்திற்கு உண்டு என்பதால் மகம் நட்சத்திற்கு திருமண பொறுத்தம் தேவை இல்லை என்கின்றனர். 

சுவாதி 

ராகுவின் நட்சத்திரமாக சுவாதி நட்சத்திரம் விளங்குகிறது. ராகு பகவான் காலபுருஷனுக்கு 7ஆம் வீடான துலாம் ராசியில் உள்ளார். இது சுக்கிரனின் வீடு ஆகும். கால புருஷனுக்கு 7ஆம் வீடான துலாம் ராசியில் முழுமையாக 4 பாதங்களும் உள்ள நட்சத்திரமாக சுவாதி நட்சத்திரம் உள்ளது. 

திருமணத்திற்கு தொடர்புடைய பாவமாக 7ஆம் வீடு உள்ளது. 7ஆம் இடத்தில் ஏதாவது ஒரு கிரகமாவது இருந்தால் எப்படியாவது திருமணம் ஆகிவிடும் என்ற சொலவடை ஜோதிடத்தில் உண்டு. 

சுவாதி நட்சத்திரம் வந்தாலே திருமண வாழ்கை சுபமாக இருக்கும். சுககாரகனான சுக்கிரன் வீட்டில், போக காரகனான ராகுவின் நட்சத்திரமான சுவாதி இருப்பதால் இந்த நட்சத்திரகாரர்களுக்கு திருமண வாழ்கை சுகபோகமாக அமையும். அதனால்தான் சுவாதி நட்சத்திரத்திற்கு திருமண பொறுத்தம் பார்க்க வேண்டாம் என்று சொல்வார்கள்.

அனுஷம் 

மகா நட்சத்திரங்களில் 4ஆவது அனுஷம் நட்சத்திரம் உள்ளது. செவ்வாயின் வீட்டில் உள்ள சனி பகவானின் நட்சத்திரமாக அனுஷம் உள்ளது. இது காலபுருஷனுக்கு 8ஆம் வீடான விருச்சிகத்தில் உள்ளது. கோபத்திற்கு காரக கிரகமாக செவ்வாய் உள்ளது. பொறுமை பண்பின் அடையாளமாக சனி கிரகம் உள்ளது. வாழ்கையில் வெற்றி பெற பொறுமை, அமைதி ஆகிய 2 குணங்களும் தேவை. இந்த குணங்கள் ஒருவரிடம் இருந்தாலே இல்லறம் சிறப்பாக இருக்கும். 

27 நட்சத்திரங்களில் பொறுமைசாலிகளாக அனுசம் நட்சத்திரக்காரர்கள் உள்ளனர். வீரியம் மிக்க செவ்வாய் வீட்டில் உள்ள அமைதியான நட்சத்திரமாக அனுசம் நட்சத்திரம் உள்ளது. இதனால் அவர்களது வாழ்கை சுற்றி எவ்வளவு பெரிய பிரச்னைகள், சவால்கள், சிக்கல்கள், வந்தாலும் அமைதியாக பொறுமையாக எதிர்கொண்டு வெற்றி பெறும் தன்மை இவர்களுக்கு உண்டு. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்