Lakshmi Rasis: கணவரின் வீட்டிற்கு லட்சுமி தேவியின் அம்சமாகப் பார்க்கப்படும் 4 பெண் ராசிகள்!
Lakshmi Rasis: கணவரின் வீட்டிற்கு லட்சுமி தேவியின் அம்சமாகப் பார்க்கப்படும் 4 பெண் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

Lakshmi Rasis: வேதஜோதிடத்தின்படி, ஒரு நபரின் ராசியை வைத்து, அவரது இயல்பு மற்றும் சிறப்பு குணங்களை கணிக்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 28, 2025 07:00 AMBad Luck Rasis: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.. அஸ்தமனத்தில் சிக்கிய ராசி.. சனி உச்சம்!
Mar 28, 2025 06:35 AMஇரட்டை ராஜ யோகம்.. மீன ராசியில் சூரியன்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் மூன்று ராசிகள்.. நல்ல லாபம் கிட்டும்!
Mar 28, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : சவால்களை தைரியமா எதிர் கொள்ளுங்கள்.. வெற்றி தேடி வரும்.. இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
லட்சுமி தேவியின் அம்சமாகப் பார்க்கப்படும் ராசிகள்:
ஜோதிடத்தில், சில ராசிப் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் கணவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறார்கள். இந்த ராசிகளின் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் நபர்கள், வாழ்க்கையில் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று நம்பப்படுகிறது.
அத்தகைய பெண்கள் லட்சுமி தேவியின் வடிவமாக விளங்குவதாக ஐதீகம். அந்தப் பெண் இருக்கும் வீட்டில், வாழ்க்கையில் ஒருபோதும் நிதிப் பிரச்னைகள் இருக்காது. திருமணத்திற்குப் பிறகு, அப்பெண்கள் திடீரென கணவனின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்குகிறாள் என்பதையும் காண முடிகிறது. எந்த ராசி பெண்கள் தங்கள் கணவர்களுக்கு அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோமா?. வாருங்கள் பார்ப்போம்.
கணவர்களுக்கு அதிர்ஷ்டசாலியாக இருக்கும் பெண் ராசிகள்:
மேஷம்: மேஷ ராசிப்பெண்கள் இயற்கையிலேயே எளிமையானவர்கள். அடக்கமானவர்கள். அவர்கள் லட்சுமி தேவியால் சிறப்பாக ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். அவர்கள் உறவில் மிகவும் நேர்மையானவர்கள். அவர் தனது கணவரை மிகவும் நேசிப்பார். மேலும் வாழ்க்கையில் முன்னேற கணவரை ஊக்குவிக்கிறார். அவர்களின் வருகையால், மாமியார் வீட்டில் நிறைய செல்வம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களை மிகவும் கவனித்துக்கொள்வார். மேஷ ராசியினர், தங்கள் மாமியாரிடம் இருந்து நிறைய அன்பையும் மரியாதையையும் பெறுகிறார்கள். மேஷ ராசி பெண்கள் தங்கள் அதிர்ஷ்டத்தால் முழு வீட்டையும் ஒளிரச் செய்வார்கள்.
சிம்மம்: சிம்ம ராசிப்பெண்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆவார். அவர்கள் இயற்கையிலேயே நேர்மையானவர்கள். கடின உழைப்பாளிகள் மற்றும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள். சிம்ம ராசிப்பெண்களைத் திருமணம் செய்து கொண்ட நபர் திடீரென்று வாழ்க்கையில் பெரும் வெற்றியைப் பெறுகிறார். ஒரே இரவில் அதிர்ஷ்டத்தைப் பெறுகிறார். ஒவ்வொரு சுக துக்கத்திலும் இல்லறத்துணைக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிம்ம ராசிக்காரப் பெண்கள் செல்லும் வீட்டில் குடும்ப உறுப்பினர்களுக்கு மகாலட்சுமியின் ஆசிர்வாதம் கிடைக்கும். மேலும் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும்.
மகரம்: மகர ராசிப்பெண்கள் தங்கள் கணவருக்கு அதிர்ஷ்டமாக கருதப்படுகிறார்கள். அவர்கள் மிகவும் புத்திசாலிகளாக செயல்படுகிறார்கள். மகர ராசிப்பெண்கள், தங்கியிருப்பது வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. மகர ராசியினருக்கு குடும்ப உறுப்பினர்களின் முகத்தில் புன்னகை இருக்கும். மகர ராசிப்பெண்கள், மகிழ்ச்சியான இயல்புடையவள் மற்றும் மற்றவர்கள் மகிழ்ந்திருக்க விரும்புகிறார்கள். மகர ராசிக்காரர்களின் பெண்கள் கணவரின் வாழ்க்கைக்கு மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். இவர்களை திருமணம் செய்து கொண்டால் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் பெருகும்.
கும்பம்: கும்ப ராசிப்பெண்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் மிகவும் பக்குவமானவர்கள். அவர்கள் உறவுகளை மிக முக்கியமானதாகக் கருதுகிறார்கள். கும்ப ராசிப்பெண்கள், இல்வாழ்க்கைத்துணையின் வாழ்நாள் முழுவதும் சுகத்திலும் துக்கத்திலும் இருப்பார்கள். இந்த ராசியின் பெண்கள் பொறுப்பிலிருந்து ஓட மாட்டார்கள். அவர்கள் பிரச்னைகளை புத்திசாலித்தனமாக எதிர்கொள்வார்கள். கும்ப ராசிப்பெண்கள், ஒவ்வொரு சூழ்நிலையிலும் தனது கணவனை ஆதரிப்பதாகவும், கனவை நனவாக்க உதவுகிறாள் என்றும் நம்பப்படுகிறது. அவள் எப்போதும் தனது அன்பு மற்றும் குடும்பத்திற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறாள்.
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்