Budhan Peyarchi: ராசியை மாற்றினார் புதன்.. கட்டு கட்டாக பணத்தை அள்ளும் 3 ராசிகள்.. எந்தெந்த ராசிகளுக்கு வாய்ப்பு?
Budhan Peyarchi: புதன் பகவானின் மகர ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிக நன்மைகளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது உறுப்பினர்கள் காணலாம்.

Budhan Peyarchi: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான் இவர் ஒரு மாதத்திற்கும் குறைவாக பயணம் செய்யக்கூடியவர் மிகவும் குறுகிய காலத்தில் பயணம் செய்யக்கூடிய கிரகமாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். புதன் பகவான் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் புதன் பகவான் இந்த ஜனவரி 24ஆம் தேதி அன்று மகர ராசிக்கு செல்கிறார். இது சனிபகவானின் சொந்தமான ராசி ஆகும். புதன் பகவானின் மகர ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிக நன்மைகளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது உறுப்பினர்கள் காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
மேஷ ராசி
புதன் பகவானின் மகர ராசி பயணம் உங்களுக்கு நிதி ஆதாயத்தை பெற்று தர போகின்றது. புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழில்துறையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய அடையாளத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
பெற்றோர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதிக பணம் செலவழிக்காமல் இருப்பது. உங்களுக்கு நல்லது போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் மாணவர்களுக்கு கிடைக்கும். தியானம் செய்தால் உங்களுக்கு மன அமைதி உண்டாகும்.
ரிஷப ராசி
புதன் பகவானின் ராசி மாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தின ரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
பெற்றோர்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி முடிவுகளில் நீங்கள் எடுக்க முடிவுகளில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
கன்னி ராசி
புதன் பகவானின் ராசி மாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய ஆதிக்கம் அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.
வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கக்கூடும். அதிக பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றி கரமாக மாறும். குழந்தைகளால் உங்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
