Shani and Sukran: மீன ராசியில் ஒன்று கூடும் சனி - சுக்கிரன் - கோடீஸ்வர யோகம்பெறபோகும் 3 ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Shani And Sukran: மீன ராசியில் ஒன்று கூடும் சனி - சுக்கிரன் - கோடீஸ்வர யோகம்பெறபோகும் 3 ராசிகள்!

Shani and Sukran: மீன ராசியில் ஒன்று கூடும் சனி - சுக்கிரன் - கோடீஸ்வர யோகம்பெறபோகும் 3 ராசிகள்!

Marimuthu M HT Tamil Published Mar 23, 2025 03:32 PM IST
Marimuthu M HT Tamil
Published Mar 23, 2025 03:32 PM IST

- மீனத்தில் சுக்கிரன் மற்றும் சனி சேர்க்கையால், மூன்று ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது.

Shani and Sukran: மீன ராசியில் ஒன்று கூடும் சனி -  சுக்கிரன் - கோடீஸ்வர யோகம்பெறபோகும் 3 ராசிகள்!
Shani and Sukran: மீன ராசியில் ஒன்று கூடும் சனி - சுக்கிரன் - கோடீஸ்வர யோகம்பெறபோகும் 3 ராசிகள்!

இது போன்ற போட்டோக்கள்

வரும் மார்ச் 29அன்று, சனி பகவான் மீன ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அந்த நேரத்தில் சனி பகவான் ஏற்கனவே மீனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சுக்கிரனை சந்திக்கிறார்.

மீன ராசியில் சனி பகவான் மற்றும் சுக்கிர பகவானின் சேர்க்கை 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. மீன ராசியில் சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் யோகப் பலன்களைக் கொண்டுவரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்த ராசியில் உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.

மீன ராசியில் சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் நன்மைபெறும் ராசிகள்:-

மீனம்:

மீன ராசியில் முதல் வீட்டில், சனி மற்றும் சுக்கிர பகவானின் கலவையானது மற்றவர்கள் மீதான உங்கள் மரியாதையை அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் அனைத்தும் மீன ராசியினருக்குக் குறையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

கூட்டுத் தொழில், மீன ராசியினருக்கு நல்ல லாபம் தரும். திடீரென பணப்புழக்கம் ஏற்படும். கையில் சேமிப்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் குறையும். அதேநேரத்தில் மற்றவர்களின் வாழ்வில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

மகரம்:

மகர ராசியின் மூன்றாவது வீடான மீன ராசியில், சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடைபெறுகிறது. இது மகர ராசியினருக்கு, நோய் நொடிகளில் இருந்து நீங்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்லப் பலன்களைத் தரும். உங்களிடம் கடன் பெற்றவர்கள், சரியாக பணத்தை இக்கால கட்டத்தில் திருப்பித் தந்துவிடுவர். இதனால், நிதி நிலைமை மேம்படும். நீங்கள் தொழில் செய்யும் போது கிடைக்காத பணமும் உங்கள் கைக்கு வரவாக வந்து சேரும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ரிஷபம்:

ரிஷபத்தில் இருந்து சனியும் சுக்கிரனும் இணைகின்றனர். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரிஷப ராசியினருக்கு, புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார ஆதாயங்களைப் பெற ரிஷப ராசியினருக்கு வாய்ப்பு உள்ளது. திருமணம், காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் உள்ள அனைத்துப் பிரச்னைகளும் குறையும். வாழ்க்கையில் சுபிட்சமான வாழ்க்கை உண்டாகும்.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர். முதுகலை கட்டுமானப்பொறியியல் துறையில் பட்டம்பெற்றவர். விகடனில் 2014-15க்கான தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர் விருது பெற்றவர். 11ஆண்டுகளுக்கும் மேலாக அச்சு,காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் அனுபவம் கொண்டவர். தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக பள்ளியில் படிக்கும்போதே கையெழுத்துப் பிரதியில் ஆரம்பித்த இவரது ஊடகப்பயணம், தாலுகா நிருபர், விகடன், மின்னம்பலம், காவேரி நியூஸ் டிவி, நியூஸ் ஜெ டிவி, ஈடிவி பாரத் தமிழ்நாடு வரை பயணிக்கச் செய்து, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் இவரை சேர்த்துள்ளது. அனைத்து துறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதக்கூடியவர். சினிமாவில் இயக்கம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவது, சிறுகதை எழுதுவது மிகப்பிடித்தமான பணிகள்!
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்