தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kubera Yogam: 12 ஆண்டுகளுக்குப் பின் ரிஷப ராசியில் உருவாகும் குபேர யோகம்: பணப்பெட்டியைத் தூக்கி சாமி ஆடப்போகும் ராசிகள்!

Kubera Yogam: 12 ஆண்டுகளுக்குப் பின் ரிஷப ராசியில் உருவாகும் குபேர யோகம்: பணப்பெட்டியைத் தூக்கி சாமி ஆடப்போகும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Jul 02, 2024 03:57 PM IST

Kubera Yogam: 12 ஆண்டுகளுக்குப் பின் ரிஷப ராசியில் உருவாகும் குபேர யோகத்தால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Kubera Yogam: 12 ஆண்டுகளுக்குப் பின் ரிஷப ராசியில் உருவாகும் குபேர யோகம்: பணப்பெட்டியைத் தூக்கி சாமி ஆடப்போகும் ராசிகள்!
Kubera Yogam: 12 ஆண்டுகளுக்குப் பின் ரிஷப ராசியில் உருவாகும் குபேர யோகம்: பணப்பெட்டியைத் தூக்கி சாமி ஆடப்போகும் ராசிகள்!

குரு பகவான், கடந்த 1.05.2024 முதல் 1.05.2025 வரை ரிஷப ராசியில் சஞ்சரிப்பார். அப்போது குபேர யோகம் உருவாகிறது.

குபேர யோகம் என்பது என்ன?:

ஜாதகத்தின் இரண்டாவது மற்றும் பதினொன்றாவது ராசியின் அதிபதி குரு பகவான், தனது சொந்த ராசியான ரிஷபத்தில் உயர் ஸ்தானத்தில் இருக்கும்போது, பரஸ்பர ராசி மாற்றத்தால், ‘குபேர யோகம்’ உண்டாகிறது. 

ஜோதிடத்தில், ’குபேர யோகம்’ மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் மூலம், ஒரு நபர் சமூகத்தில் மிகுந்த மரியாதையைப் பெறுகிறார் என்று கூறப்படுகிறது. ஜாதகரின் வாழ்க்கையில் செல்வம், மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது என்று சொல்லப்படுகிறது. குபேர யோகத்தால் ஒரு சிலர் மிகுந்த வசதிகளுடன் வாழ்கிறான். குபேர ராஜ யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு 1 வருடம் பம்பர் பரிசு கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்கள் குபேர ராஜயோகத்தால் மிகவும் சுப பலன்களைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் கிடைத்து, உங்களுக்கு நன்மை தரும். பணத்தட்டுப்பாடு நீங்கும். தொழில் வாழ்க்கையில் முன்னேற பல வாய்ப்புகள் அமையும். உடல்நலம் இல்லாதவர்கள் உடல்நலம்பெற்று மீள்வர். வியாபாரிகளுக்கு இது நல்ல நேரமாக அமையும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். லக்ஷ்மி தேவியின் அருளால், செல்வம் மற்றும் தானியங்கள் மிதமிஞ்சி கிட்டும். உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பு அதிகரிக்கும். 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் நன்மை பயக்கும். இது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும். உடல் சுகங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணம் கைகூடும். மாணவர்களுக்கு இது உகந்த நேரம். கல்விப் பணிகளில் அபரிமிதமான வெற்றி கிடைக்கும். குழந்தைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள் வெற்றி பெறும். தொழில், வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் அடைவீர்கள்.

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்களின் துரதிர்ஷ்டத்தை குபேர யோகம் பிரகாசமாக்கும். இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலைமை வலுவாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உங்களுக்கு நன்மைத் தரும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். செல்வம் பெருகும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அபரிமிதமான வெற்றி பெறுவார்கள். காதல் உறவுகளில் இனிமை இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நடக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

 

டாபிக்ஸ்