புத்தாண்டில் உருவாகும் 4 கிரகங்களின் மாற்றம்.. கூட்டுப்பலனில் நன்மையை ருசிக்கப்போகும் 3 ராசிகள்
புத்தாண்டில் உருவாகும் 4 கிரகங்களின் மாற்றம்.. கூட்டுப்பலனில் நன்மையை ருசிக்கப்போகும் 3 ராசிகள் குறித்துக் காண்போம்.
விரைவில் 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்க உள்ளது. இந்நிலையில், ஜனவரி மாதப் புத்தாண்டில் எந்த பெரிய கிரகங்கள் ராசியை மாற்றும் என்பது குறித்துப் பார்ப்போம்.
வரும் ஜனவரி மாதத்தில் புதன் பகவான், சுக்கிர பகவான், செவ்வாய் பகவான், சூரிய பகவான் ஆகிய கிரகங்கள் ராசிகளை மாற்றயிருக்கின்றன.
முதலாவதாக, வரும் ஜனவரி 4, 2025அன்று, புதன் தனுசு பகவானின் ராசிக்கு நகரும். ஜனவரியில் சுக்கிர பகவான் மீன ராசியில் நுழைய இருக்கிறார். வரும் மார்ச் மாதத்தில் சனி பகவானும் மீன ராசியில் நுழைய இருக்கிறார். ஜனவரிக்குப் பிறகு, கடகத்தில் செவ்வாய் சஞ்சரிப்பார்.
இந்த மாற்றம் பல ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 2025ஆம் ஆண்டு மிகப்பெரிய மாற்றம் சனியின் பெயர்ச்சியால் வரும் மாற்றமாகும். இதில் சனி பகவான் மீனத்தில் செல்லவுள்ளார். சனி பகவான் மார்ச் 2025ஆம் ஆண்டில் ராசியை மாற்றுவார்.
வரும் ஜனவரி 4ஆம் தேதி, புதன் பகவான், தனுசு ராசியில் நுழைகிறார். செவ்வாய் பகவான், வரும் ஜனவரி 21, 2025ஆம் ஆண்டு மிதுன ராசியில் நுழைவார். சுக்கிர பகவான் ஜனவரி 28ல் மீன ராசியில் நுழைகிறார். ஜனவரி 14-ம் தேதி சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.
குறிப்பாக, மூன்று ராசிக்காரர்கள் இந்த மாற்றங்களால் பயனடைவார்கள். அனைத்து ராசிக்காரர்களும் இந்த மாற்றத்தால் பின் விளைவுகளைச் சந்திப்பர் என்றாலும், குறிப்பாக மேஷம், ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும்.
புத்தாண்டில் உருவாகும் கிரக மாற்றத்தால் அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிகள்:
மேஷம்:
புத்தாண்டின் முதல் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்கள் நேர்மறையானதாக இருக்கும் மற்றும் மேஷ ராசியினருக்கு நன்மையே நிறைய கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களது உச்சபட்ச பணித்திறனைச் செய்வீர்கள் மற்றும் நிதி நிலைமையில் முன்னேற்றம் காண்பீர்கள். மொத்தத்தில் பல வருமான ஆதாரங்கள் உருவாக்கப்பட்டு வருமானம் அதிகரிக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் சில ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டின் முதல் மாதம் நல்லவிதமாகவே இருக்கும். பொருளாதார நிலை உங்களுக்கு நன்றாக இருக்கும். தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். புத்தாண்டு உங்களுக்கு பல மகிழ்ச்சியைத் தரும். வேலை விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால் பணத்தின் அடிப்படையில் உங்கள் நிலை நன்றாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு நேரம் கொஞ்சம் மாறக்கூடியதாக இருக்கும். உங்கள் பணிகள் அனைத்தும் கச்சிதமாக நிறைவேறும். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, உங்களுக்கான நன்மைகள் பலவும் ஆண்டுமுழுவதும் செய்யப்படும்.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்