கடக ராசியில் ஏறி அமரும் செவ்வாய்.. அபரிமிதமான யோகத்தை அசால்ட்டாகப் பெறும் 3 ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கடக ராசியில் ஏறி அமரும் செவ்வாய்.. அபரிமிதமான யோகத்தை அசால்ட்டாகப் பெறும் 3 ராசிகள்

கடக ராசியில் ஏறி அமரும் செவ்வாய்.. அபரிமிதமான யோகத்தை அசால்ட்டாகப் பெறும் 3 ராசிகள்

Marimuthu M HT Tamil Published Oct 19, 2024 04:32 PM IST
Marimuthu M HT Tamil
Published Oct 19, 2024 04:32 PM IST

கடக ராசியில் ஏறி அமரும் செவ்வாய்.. அபரிமிதமான யோகத்தை அசால்ட்டாகப் பெறும் 3 ராசிகள் குறித்துக் காண்போம்.

கடக ராசியில் ஏறி அமரும் செவ்வாய்.. அபரிமிதமான யோகத்தை அசால்ட்டாகப் பெறும் 3 ராசிகள்
கடக ராசியில் ஏறி அமரும் செவ்வாய்.. அபரிமிதமான யோகத்தை அசால்ட்டாகப் பெறும் 3 ராசிகள்

இது போன்ற போட்டோக்கள்

அவ்வாறு தங்கும் செவ்வாய் கிரகமானது அடுத்தாண்டு ஜனவரி 23ஆம் தேதி வரை தங்கியிருப்பதன் மூலம் தனது செல்வாக்கை நிலைநாட்டும். அப்போது செவ்வாய் கிரகத்தின் பிற்போக்கு இயக்கம் மிதுன ராசியில் நுழையும். கடகம் செவ்வாய் கிரகத்தின் பலவீனமான ராசியாக கருதப்படுகிறது. கடகத்தில் சஞ்சரிக்கும் போது, செவ்வாய் கிரகம் தனது முழு சுப பலனைத் தரத் தவறிவிடுகிறது. இந்த பெயர்ச்சியின் மூலம் செவ்வாய் சனியுடன் சேர்ந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகிறது.

அதாவது, சனி பகவான் செவ்வாய் கிரகத்திலிருந்து எட்டாம் வீட்டிற்கும், செவ்வாய் சனியிலிருந்து ஆறாம் வீட்டிற்கும் சஞ்சரிக்கும். இதன் காரணமாக சமூக, அரசியல், பொருளாதார, மதம் சார்ந்த விஷயங்களில் சாதகமான சூழ்நிலைகள் பலருக்கு அமையாது. 

கடக ராசி செவ்வாய் கிரகத்தில் பெயர்ச்சி ஆவதால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்:

மேஷம்: ஜோதிடத்தின்படி, அக்டோபர் 20ல் கடக ராசியில் நடக்கப்போகும் செவ்வாய் பெயர்ச்சியினால், மேஷ ராசியினருக்கு பாஸிட்டிவ் ஆன நன்மைகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை வாங்கும் சூழல் வாய்த்து மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரம் வலுப்பெறும். கடின உழைப்பு மற்றும் பணியிடத்தில் நேர்மறையான வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உங்களது உழைப்பு மேல் இடத்துக்குத் தெரியவந்து உரிய அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். அயல்நாடு செல்ல விரும்பி முயற்சி எடுப்பவர்களுக்கு அதற்குண்டான வாய்ப்புகள் கிட்டும். வெகுநாட்களாக வரன் அமையாத மேஷ ராசியினருக்கு திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தை இந்த காலத்தில் விரிவு செய்வீர்கள்.

சிம்மம்: 

போட்டியில் வெற்றியும், எதிரிகளிடமிருந்து விடுதலையும் பெறலாம். வலிமையும், கடின உழைப்பும் அதிகரிக்கும். கடக ராசியில் செவ்வாயின் பெயர்ச்சியால் சிம்ம ராசியினைச் சார்ந்தவர்களுக்குப் பணியிடத்திலும் வாழ்விலும் புரொமோஷன் கிடைக்கும். வெகுநாட்களாக உங்களிடம் கடன் பெற்று திருப்பித் தராமல் இருக்கும் நபர் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவார். உங்கள் ஐடியாக்களுக்கு பிறர் முதலீடு செய்ய முன்வருவர். இந்த காலகட்டத்தில் யுக்தியைப் பின்பற்றிப் பயணித்தால் லாபம் ஈட்டுவது உறுதி.

கன்னி: கடக ராசியில் செவ்வாய் பெயர்ச்சி ஆவதால், பணத்தின் பலன்கள் நல்ல முறையில் கன்னி ராசியினருக்குக் கிடைக்கும். பணியிடத்தில் உங்களுடன் பணியாற்றியவர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்புடன் இருப்பர். அயல் நாட்டுக்குச் சென்று படிக்க நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் உண்டாகும். வெகுநாட்களாக தன்னம்பிக்கையின்மையால் அவதிப்பட்டு வந்த கன்னி ராசியினர், உற்சாகமாகவும் ஊக்கமாகவும் இருப்பீர்கள். புத்திசாலித்தனம் மற்றும் தன்னம்பிக்கையால் சிறப்பான வெற்றிகளைப் பெறுவீர்கள். நல்வாய்ப்புகள் நிறைய உங்களைத் தேடி வரும். தொழில் வாழ்வில் சிறந்த வெற்றியைப் பெறலாம்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.