தமிழ் செய்திகள்  /  Astrology  /  2024 Palangal For Viruchigam Rasi Rajathi Raja Yogam Come This Period In Horoscope Astrology

Rajathi Raja Yogam: 4ம் இடத்தில் சனி.. ராஜாதி ராஜா யோகம்.. கப்பு அடிக்குமா விருச்சிகம்.. வருங்காலம் எப்படி?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 02, 2024 07:31 PM IST

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சடார் என்று வாழ்க்கையில் ஒரு பெரிய இடத்தை அடைவதற்கான வாய்ப்புகள் எப்போதுமே இருந்திருக்கின்றன.

விருச்சிக ராசிக்கு காலம் எப்படி?
விருச்சிக ராசிக்கு காலம் எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

விருச்சிக ராசியை பொறுத்தவரை, உங்களுக்கு உங்களை விட ஒரு பெரிய எதிரி இருக்க முடியாது. ஆம், உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிற மனப்பான்மையும், மன அழுத்தமும், உங்களை பித்து பிடித்தவர் போல அலைய வைக்கும். அதற்கு காரணம் என்னவென்றால் சந்திரன் நீச்சம் அடைவது. 

பொதுவாக உங்களைப் பொறுத்தவரை உங்கள் மீது யாராவது பாசம் வைத்து விட்டால், அதைவிட பன்மடங்கு பாசத்தை நீங்கள் அவர்கள் மீது செலுத்துவீர்கள். அதை உங்களால் மிக எளிதாக எடுக்கவும் முடியாது.

உங்களது புத்திக்கு தெரியும். அது சரியானது இல்லை என்று; ஆனால், உங்கள் மனம் அதை விட்டுக் கொடுக்காது. இதனால் மீண்டும் மீண்டும் நீங்கள் அதற்குள் சென்று, மீள முடியாமல் அவஸ்தைக்கு உள்ளாகி கொண்டு இருப்பீர்கள். 

இது பெரும்பான்மையான விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வாக இருக்கிறது. விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை அவர்களுக்கு பெரும்பாலும் காதல் திருமணமே அரங்கேறும். அதுவும் தவறான ஆட்களின் மீது காதல் கொண்டு, திருமணம் செய்து கொள்வார்கள். அதன் பின்னர் வருத்தப்பட்டு கொண்டு இருப்பார்கள். 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல குழந்தை பிறந்தாலும் குழந்தையின் வழியாகவும் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

வயது முதிர்ந்தவர்களுக்கு தொடர்ந்து உடல் ரீதியாக பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கும். அந்த பிரச்சினைகளுக்கு மருத்துவம் பார்த்த போதும், அதிகமாக செலவழித்த போதும், அந்த பிரச்சினை ஆனது அவர்களது உடலில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.  இவை உங்களுக்கு நடக்கு தீய விஷயங்கள். இப்போது நல்ல விஷயங்களை பார்ப்போம். 

விருச்சிக ராசி காரர்களுக்கு சடார் என்று வாழ்க்கையில் ஒரு பெரிய இடத்தை அடைவதற்கான வாய்ப்புகள் எப்போதுமே இருந்திருக்கின்றன.

பிரதமர் மோடி விருச்சிகராசிக்காரர்தான். அவரை 50 வயது வரை யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் சடாரென்று முதலமைச்சர் ஆனார். அடுத்ததாக பிரதமர் ஆனார். இப்படியான திடீர் யோகமானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு அமையும்.

உங்களது நான்காம் இடத்தில் இருக்கக்கூடிய சனிபகவான் அர்த்தாஷ்டம சனியாக வருகிறார். அதனால் தாயின் உடல்நலத்தில் மிக மிக அதிகமான கவனம் தேவை. வாகனம், நிலம், வீடு உள்ளிட்டவற்றை வாங்கும் பொழுது, மிக மிக கவனமாக வாங்க வேண்டும். 

காரணம் என்னவென்றால், அதில் வில்லங்கம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மருத்துவ தொழிற்சார்ந்த படிப்புகள் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல ஒரு வருங்காலமானது அமையும். 

அதேபோல வெளிநாடு செல்லும் நபர்களுக்கும் இந்த காலம் பொற்காலமாகும். ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை விருச்சிக ராசிக்காரர்களுக்கு.. ராஜாதி ராஜயோக காலம் என்று சொல்ல முடியும். மறக்காமல் செவ்வாய்க்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வாங்கி கொடுங்கள்” என்று பேசினார். 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்