தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Poonch Terror Attack: பூஞ்ச் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம்

Poonch Terror Attack: பூஞ்ச் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம்

Apr 21, 2023, 08:53 PM IST

  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவத்தினர் சென்ற வாகனத்தில் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. பாடா துரியன் என்ற பகுதிக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து இந்த தாக்குதலானது நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கண் இமைக்கும் நேரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த நிலையில், 7 பேர் சேர்ந்த தீவிரவாத கும்பல் இதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினரும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு அருகே தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ராணுவத்தினர், போலீஸ், உளவுத்துறை அமைப்பினர் ஒருங்கிணைந்து இந்த தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையை சாதகமாக வைத்து, ராக்கெட் உந்து குண்டுகளை பயன்படுத்தி தீவிரவாதிகள் இதில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.