Weather Update : மக்களே உஷார்.. இன்று கனமழை வாய்ப்புள்ள பகுதிகள் இதுதான்.. எந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை பாருங்க!
Jun 27, 2024, 08:03 AM IST
Weather Update : இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை நிலவரப்படி கோவையில் 200 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
Weather Update : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் நல்ல வெயிலும், இரவு நேரத்தில் மழையும் கொட்டி வருகிறது. இந்நிலையில் நீலகிரி கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை துவங்கி வருகிறது. இந்த நிலையில், மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆரஞ்ச் அலார்ட்
இந்நிலையில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை நிலவரப்படி கோவையில் 200 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27.06.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
27.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
28.06.2024 முதல் 01.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
26.06.2024: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
27.06.2024 முதல் 29.06.2024: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் அந்த கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
முன்னதாக, கன மழை காரணமான நீலகிரி மாவட்டம் , கூடலூர் மற்றம் பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்