தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Doctorate: பி.ஹெச்டி. படிப்புகள் குறித்து ஒரே செய்தியில் இரு தகவல்-அறிய ஆவலா?

Doctorate: பி.ஹெச்டி. படிப்புகள் குறித்து ஒரே செய்தியில் இரு தகவல்-அறிய ஆவலா?

Priyadarshini R HT Tamil

Mar 12, 2023, 10:19 AM IST

google News
P.hd Course Details: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர, முழு நேரபிஹெச்.டி. பயிலுவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
P.hd Course Details: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர, முழு நேரபிஹெச்.டி. பயிலுவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

P.hd Course Details: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர, முழு நேரபிஹெச்.டி. பயிலுவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின்பல்வேறு துறைகளிலும் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களில் முழு நேரம் அல்லதுபகுதி நேர ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு (பிஹெச்.டி.) மாணவர் சேர்க்கைக்கானவிண்ணப்பம் நாளை முதல் பல்கலைக்கழக இணையதளத்தில் வழங்கப்படுகிறது.

பொதுப்பிரிவினர்ஆயிரம் ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி.யினர் 500 ரூபாயும் இணைய வழியில் செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் பல்கலைக்கழகத்துக்குஅனுப்பிவைக்க வேண்டும்.

ஜூலைபிஹெச்.டி. பட்டப் படிப்புக்கானசேர்க்கை கடந்த ஆகஸ்டில் நடைபெற்றபொது நுழைவுத்தேர்வு, நேர்காணல், பாரதியார் பல்கலைக்கழகவிதிகள், விதிமுறைகளின் அடிப்படையிலும் நடைபெறும். இது தொடர்பான மேலும்விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைக் காணலாம் என்று பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பயிற்சி பேராசிரியர்கள் பி.ஹெச்டி வழிகாட்டியாகலாம்

பயிற்சியில்உள்ள கல்லூரி பேராசிரியர்கள் பி.ஹெச்டி வழிகாட்டுனராக பணியாற்றலாம் என பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது. 

கல்லூரிகள்மற்றும் பல்கலைக்கழகங்களில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள், தங்களது இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தில், பி.ஹெச்டி மாணவர்களுக்குவழிகாட்டுனர்களாக செயல்பட முடியாது. இரண்டாண்டு பயிற்சி நிறைவடைந்து சான்றிதழ் பெற்றால் மட்டுமே அவர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுனர்களாக பணியாற்ற முடியும். இந்த விதிமுறையால், பி.ஹெச்டி வழி காட்டுனர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, மாணவ, மாணவிகள் நாடு முழுவதும் வழிகாட்டுனர்கள்இல்லாமல் தள்ளாடும் நிலைக்கு ஆளாக்கப்பட்டதுடன், ஆராய்ச்சி படிப்புகளின் எண்ணிக்கையும் சரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இப்பிரச்னைக்குதீர்வு காணும் வகையில், அகில இந்திய பல்கலைக்கழகமானியக்குழுவான யு.ஜி.சி. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “உயர்கல்வி நிறுவனங்களில் நிரந்தர பணியில் சேரும் பேராசிரியர்கள், தங்களின் பயிற்சி காலத்திலும், பி.ஹெச்டி வழிகாட்டுனராக செயல்பட அனுமதிஅளிக்கப்படுகிறது. எனவே பயிற்சியில் உள்ளபேராசிரியர்களை வழிகாட்டுனர்களாக செயல்பட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் அனுமதிக்கலாம்" என தெரிவித்துள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி