தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ‘அதிமுக வாக்குகளை விஜய் ஈர்க்க முடியாது’-இபிஎஸ், 'விஜய் ரசிகர்கள் எனக்கு வாக்களிப்பார்கள்'-சீமான் பேட்டி

Top 10 News: ‘அதிமுக வாக்குகளை விஜய் ஈர்க்க முடியாது’-இபிஎஸ், 'விஜய் ரசிகர்கள் எனக்கு வாக்களிப்பார்கள்'-சீமான் பேட்டி

Manigandan K T HT Tamil

Oct 29, 2024, 12:58 PM IST

google News
சென்னையில் CMDA சார்பில் மேற்கொள்ளப்படும் ரூ.98.21 கோடி மதிப்பிலான 6 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் டாப் 10 தமிழ்நாடு செய்திகளைப் பார்ப்போம்.
சென்னையில் CMDA சார்பில் மேற்கொள்ளப்படும் ரூ.98.21 கோடி மதிப்பிலான 6 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் டாப் 10 தமிழ்நாடு செய்திகளைப் பார்ப்போம்.

சென்னையில் CMDA சார்பில் மேற்கொள்ளப்படும் ரூ.98.21 கோடி மதிப்பிலான 6 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் டாப் 10 தமிழ்நாடு செய்திகளைப் பார்ப்போம்.

‘அதிமுக வாக்குகளை விஜய் ஈர்க்க முடியாது’ என தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சு குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் டாப் 10 தமிழக செய்திகளைப் பார்ப்போம்.

  •  விஜயின் வருகையால் எனது வாக்குகள் குறையாது என தேனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும் போது ரசிகர்களை சந்தித்துதான் வந்தனர். ஆனால், திரைத்துறையில் இருந்து வந்த நான், மக்களை சந்தித்துதான் அரசியலுக்கு வந்தேன். ஒரு நடிகரைப் பார்க்க கூட்டம் அதிகளவு வரும். ஆனால், கூட்டத்தில் வந்தவர்களின் வாக்குகள் எல்லாம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே. விஜயின் வருகையால் எனது வாக்குகள் குறையாது. விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றார் சீமான்.
  •   “‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்னும் பொன் மொழிக்கேற்ப, பள்ளிச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் அருகிலுள்ள அஞ்சலகத்தில் சேர்ந்து சேமிப்புக் கணக்கினைத் துவங்கிட இந்த உலக சிக்கன நாளில் கேட்டுக்கொள்கிறேன். ‘செலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிவிடுவோம்’ என்னும் உறுதி கொண்டு சிறப்பாக வாழ்ந்திடுவோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக சிக்கன நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிஎம்டிஏ திட்டப் பணிகள் தொடங்கி வைப்பு

  •   சென்னையில் CMDA சார்பில் மேற்கொள்ளப்படும் ரூ.98.21 கோடி மதிப்பிலான 6 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
  •  மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தில் ரூ.24.50 கோடி முறைகேடு செய்ததாக கைதான தேவநாதன் யாதவை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிபிசிஐடி விசாரிக்கும் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தேவநாதன் யாதவ் உள்பட 3 பேர் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்துள்ளது.
  •   தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என்பதால் பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வில் ஈடுபட்டார். போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
  •  ஆயுள் தண்டனைக் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது தீவிரமாக கவனிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீட்டுப்பணிகளுக்கு கைதிகளை மட்டுமல்ல, ஆர்டர்லியாக காவல்துறையினரையும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர். இவ்விவகாரத்தில் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில்..

  •  தீபாவளி பண்டிகையையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்கென சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 11 தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் 20 பொது சிகிச்சை படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  •   பொன்னேரி அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், காற்றாலைக்கான ராட்சத இறக்கை ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு லாரி அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் போக்குவரத்து மீண்டும் சீரானது.
  •  “2016ல் ஜெயலலிதா அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றிருந்தால், இப்போது அவர் உயிரோடு இருந்திருப்பார். ஆனால் அவர் கேட்கவில்லை!” என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி