தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’உடைத்து பேசிய செங்கோட்டையன்! நக்கீரர் வளைவு விபத்தில் ஒருவர் பலி!’ டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’உடைத்து பேசிய செங்கோட்டையன்! நக்கீரர் வளைவு விபத்தில் ஒருவர் பலி!’ டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil

Published Feb 13, 2025 09:45 AM IST

google News
TOP 10 NEWS: என்னை சோதிக்காதீர்கள் என செங்கோட்டையன் பேச்சு, திமுக அரசு மீது அண்ணாமலை விமர்சனம், நக்கீரர் நினைவு வளைவு இடிப்பில் ஒருவர் உயிரிழப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
TOP 10 NEWS: என்னை சோதிக்காதீர்கள் என செங்கோட்டையன் பேச்சு, திமுக அரசு மீது அண்ணாமலை விமர்சனம், நக்கீரர் நினைவு வளைவு இடிப்பில் ஒருவர் உயிரிழப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: என்னை சோதிக்காதீர்கள் என செங்கோட்டையன் பேச்சு, திமுக அரசு மீது அண்ணாமலை விமர்சனம், நக்கீரர் நினைவு வளைவு இடிப்பில் ஒருவர் உயிரிழப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

1.என்னை சோதிக்காதீர்கள்

இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். என்னை சோதிக்காதீர்கள். என்னை வாழவைத்தவர்கள் ஜெயலலிதாவும், எம்ஜியாரும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு.

2.பாஜக தலைவராக தொடர முடியாது

பாஜக தலைவராக தொடர முடியாது என்று எனக்கு தெரியும். ஆனால் நான் இங்கு இருந்து செலும் போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலையும் எடுக்காமல் விடமாட்டேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு.

3.காப்பி அடிக்கும் முதலமைச்சர்

10 ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் மோடி மக்கள் மருந்தகங்களை திறந்தார். இதைவிட காப்பி அடிக்கிற முதல்வரை இந்தியாவிலேயே பார்க்க முடியாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் விமர்சனம்.

4.போக்சோவில் ஆசிரியர் கைது - சஸ்பெண்ட்

திருப்பூரில் மாணவர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் சுந்தரவடிவேல் கைதான நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

5.கார் தீப்பிடித்து ஒருவர் உயிரிழப்பு 

அரியலூரில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததில் ஹோட்டல் உரிமையாளர் அன்பழகன் உயிரிழப்பு. 

6.மாணவர்கள் மீது போக்சோ வழக்கு 

சேலம் அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. 

7.பேருந்தை கடத்தியவர் கைது 

மாநகர பேருந்தில் சில்லறை கொடுக்கல் - வாங்கல் விவகாரத்தில் நடத்துநரிடம் நடந்த வாக்குவாதத்தின் எதிரொலியாக திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து நள்ளிரவில் மதுபோதையில் பேருந்தை கடத்தி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். 

8.சிறப்பு ரயில்கள் இயக்கம் 

சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பயணிகளின் வசதிக்காக, சென்ட்ரல் – பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

9.நக்கீரர் வளைவு இடிப்பு- ஒருவர் உயிரிழப்பு

மதுரை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள நக்கீரர் அலங்கார நினைவு வளைவை அகற்றியபோது ஏற்பட்ட விபத்தில், பொக்லைனை இயக்கியவர் உயிரிழப்பு. ஒப்பந்ததாரர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

10.மீனாட்சி அம்மன் கோயிலில் இரவு முழுவதும் தரிசனம் 

சிவராத்திரியையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு முதல் 27ஆம் தேதி அதிகாலை வரை பக்தர்கள் தரிசனம் செய்ய நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. 

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.