Top 10 News : 13 அமாவாசைக்குள் திமுக ஆட்சிக்கு முடிவு - எடப்பாடி பழனிச்சாமி; ஆளுநரை மாற்றாதிங்க - முதல்வர் வேண்டுகோள்!
Jan 19, 2025, 10:32 AM IST

இன்னும் 13 அமாவாசைதான் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என எடப்பாடி பழனிச்சாமி ஆருடம்.. ஆளுநரை மாற்ற வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் உள்ளிட்ட இன்றைய டாப் 10 செய்திகளை இங்கு பார்க்கலாம்.
இன்னும் 13 அமாவாசைதான் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என எடப்பாடி பழனிச்சாமி ஆருடம்.. ஆளுநரை மாற்ற வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் உள்ளிட்ட இன்றைய டாப் 10 செய்திகளை இங்கு பார்க்கலாம்.
13 அமாவாசைக்குள் திமுக ஆட்சிக்கு முடிவு
சென்னையில் நடந்த எம்ஜிஆர் 108 ஆவது பிறந்த நாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசைதான் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தேர்தலை வாய்ப்பாக கருதுகிறோம் - அமைச்சர் முத்து சாமி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் திமுக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பதை விட மக்களுக்கு உள்ள பிரச்னைகளைக் கேட்டறிந்து தீர்ப்பதற்கான நடவடிக்கையை எடுக்கச் சொல்லி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்த அடிப்படையில் இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாகக் கருதி தொகுதியில் மக்களை நேரடியாகச் சந்தித்து வருகின்றோம்" என ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மழை வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை நாக பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை
தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையல் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஐந்தருவி, மெயில் அருவி உள்ளிட்ட அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவடையும் நிலையில் சொந்த ஊர் சென்ற மக்கள் ஊர் திரும்பும் வகையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி இன்று இரவு 10 மணிக்கு மண்டபத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
கிளாம்பாக்க ரயில் நிலைய பயன்பாடு மே மாதம் தொடக்கம்
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 500 மீ தொலைவில் 3 நடைமேடைகளுடன் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த ரயில் நிலையம், மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி
சென்னையை அடுத்த முட்டுகாட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கட்டுமான பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த பன்னாட்டு அரங்கத்திற்கு கடலோர மண்டல ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
திருவள்ளுவருக்கு காவி உடை - ப.சிதம்பரம் கண்டனம்.
திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை என்பது வருத்தம் அளிக்கிறது. பாஜக அரசின் ஜி.எஸ்டி வரி விதிமுறை தவறு என முன்னாள் நிதிஅமைச்சர் பா. சிதம்பர் தெரிவித்தார்.
ரூ.50,100க்குக்கு கரும்பு ஏலம்
காரைக்குடியில் நடைபெற்ற புனித வனத்து அந்தோணியார் கோயில் பொங்கல் விழாவில் ரூ.51, 100க்கும் கரும்பு ஏலம் விடப்பட்டது. இந்த கரும்பை ஏலத்தில் எடுத்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
டாபிக்ஸ்