தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: சென்னை விமான சாகச நிகழ்வில் ஒருவர் உயிரிழப்பு முதல் சாம்சாங் போராட்டம் வரை!

TOP 10 NEWS: சென்னை விமான சாகச நிகழ்வில் ஒருவர் உயிரிழப்பு முதல் சாம்சாங் போராட்டம் வரை!

Kathiravan V HT Tamil

Oct 06, 2024, 07:21 PM IST

google News
TOP 10 NEWS: சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சி, விமான சாகச நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் பாராட்டு, தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
TOP 10 NEWS: சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சி, விமான சாகச நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் பாராட்டு, தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சி, விமான சாகச நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் பாராட்டு, தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

1.சென்னையில்போக்குவரத்து சீரானது

மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலைகளில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.

2.விமான சாகச நிகழ்ச்சி சாதனை 

உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்ற சாதனையை சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி படைத்தது. 

3.அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

“செந்தில் பாலாஜி மீதுள்ள பயத்தினால்தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளனர்” – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

4.விமான சாகசத்தை பார்த்தவர் உயிரிழப்பு 

சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகர நிகழ்ச்சியை பார்க்க வந்த 56 வயது ஆன ஜான் என்பவர் உயிரிழந்தார். காமராஜர் சாலையில் மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. 

5.விமான சாகச நிகழ்ச்சிக்கு முதல்வர் பாராட்டு 

சூப்பர் ஸ்டார்களின் கண்கவர் நிகழ்ச்சியை சென்னை ரசித்தது; விமானப்படை வீரர்கள் நமது ஹீரோக்கள்; இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சிக்கு நன்றி என மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட். 

6.தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி 

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது. சென்னையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். 

7.சாம்சாங் போராட்டம் - டிஆர்பி ராஜா ட்வீட்

“நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க சாம்சாங் நிறுவன மேலாளர்கள் உடன் உரையாடினோம். தொழிலாளர்களுக்கு தீர்வு கிடைப்பதற்கான முயறசிகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எல்லா தரப்புக்கும் பயனுள்ல நல்ல முடிவு எட்டப்படும்” என நம்புவதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ட்வீட். 

8.ஆளுநர் விமர்சனம்

தமிழ்நாட்டில் மத்திய துறையினர் பல கிலோ போதை பொருட்களை கைப்பற்றுகின்றனர். மாநில போலீசார் கஞ்சா தவிர பிற போதை பொருட்களை ஒரு கிராம் கூட கைப்பற்றியதாக தகவல் இல்லை. போதை பொருள் கிடங்குகள் பாகிஸ்தான், துபாய், தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுவதாக போதை பொருள் ஒழிப்பு பேரணியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு. 

9.பூரண மதுவிலக்கே லட்சியம்

பூரண மதுவிலக்கு என்பது எங்கள் லட்சியம்; படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பது நிச்சயம். 500 மதுக்கடைகளை குறைத்து உள்ளோம் என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி.

10.தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம் 

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கப் பட்டிருக்கிறது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட விவரங்களுக்கு, இரு மாதங்களுக்கு முன் இன்னொருவருக்கு வழங்கப்பட்ட அரைகுறையான, மோசடியான விவரங்களை வழங்கி திமுக அரசு ஏமாற்றியிருக்கிறது. ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லாமலேயே வன்னியர்களுக்கு 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு விட்டது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயன்றது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. திமுக அரசின் சமூக நீதி மோசடி கண்டிக்கத்தக்கது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி