TOP 10 NEWS: ‘முதலமைச்சர் உடன் திருமா சந்திப்பு முதல் திமுகவை சாடும் ராமதாஸ் வரை…!’
Sep 16, 2024, 02:41 PM IST
TOP 10 NEWS: சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்பு, ராமசாமி படையாச்சிக்கு முதலமைச்சர் மரியாதை, முதலமைச்சர் உடன் திருமா சந்திப்பு, அரசியல் விமர்சகர் காந்தராஜ் மீது வழக்குப்பதிவு உள்ளிட்ட முக்கிய செய்திகள் தொகுப்பு….!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்பு
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில், பெரியாரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி, சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உறுதிமொழியை முதல்வர் வாசிக்க, அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
ராமசாமி படையாட்சிக்கு முதலமைச்சர் மரியாதை
ராமசாமி படையாட்சியாரின் 107ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் உடன் திருமா சந்திப்பு
அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு. மது ஒழிப்பு மாநாட்டின் கோரிக்கைகள் குறித்த விவரங்களை அளித்ததாக தகவல். ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசவில்லை. திமுக - விசிக கூட்டணியில் விரிசல் இல்லை என்றும் திருமாவளவன் திட்டவட்டம்.
விசிக மாநாட்டில் திமுக பங்கேற்பு
வி.சிக. மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என திருமாவளவன் தகவல். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சுமார் 10 நிமிடங்கள் திருமாவளவன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
டாடா கார் தொழிற்சாலைக்கு அடிக்கல்
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 9 ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் டாடா ஜே.எல்.ஆர் தொழிற்சாலைக்கு வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
காந்தராஜ் மீது வழக்குப்பதிவு
சினிமா நடிகைகள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் அரசியல் விமர்சகர் காந்தராஜ் மீது காவல்துறை வழக்குப்பதிவு.
விநாயகர் சிலை ஊர்வலம் - வழக்குப்பதிவு
சென்னை திருவல்லிக்கேணியில் மசூதி தெரு வழியாக விநாயகர் சிலையை எடுத்து சென்ற 63 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு.
வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும் என்றும், ஒரு சில இடங்களில் இயல்பை விட 7 பாரண்ஹீட் வெப்பம் அதிகரிக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்
கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே பேருந்து நிறுத்ததில் பெண்கள் கைக்காட்டிய பின்னரும் பேருந்தை நிறுத்தாமல் இயக்கிய பேருந்து ஓட்டுநர் ஸ்டீபன் மற்றும் நடத்துனர் மணிகண்டனை தற்காலிக நீக்கம் செய்து மண்டல போக்குவரத்துக் கழக மேலாளர் உத்தரவு.
திமுக அரசுக்கு பாமக கண்டனம்
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, நாளையுடன் 900 நாட்கள் ஆகும் நிலையில், சமூக அநீதிக் கூடாரமாகத் திகழும் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு அந்தத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து வருகிறது. சமூகநீதி என்ற பசுத்தோலைப் போர்த்திக் கொண்டு திமுக அரசு காட்சியளித்தாலும், அது சமூக அநீதி என்ற புலி தான் என்பதை வன்னியர்களுக்கு இழைத்து வரும் துரோகத்தின் மூலம் மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து.
டாபிக்ஸ்