தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: கார் ரேஸா? நாய் ரேஸா? கலாய்க்கும் ஜெயக்குமார்! ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருது! இன்றைய டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: கார் ரேஸா? நாய் ரேஸா? கலாய்க்கும் ஜெயக்குமார்! ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருது! இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil

Sep 01, 2024, 02:09 PM IST

google News
சென்னையில் நடக்கும் ஃபார்முலா 4 கார் பந்தயம், முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம், தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
சென்னையில் நடக்கும் ஃபார்முலா 4 கார் பந்தயம், முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம், தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

சென்னையில் நடக்கும் ஃபார்முலா 4 கார் பந்தயம், முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம், தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

Afternoon Top 10 news: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

1.மாணவிகளுக்கு பாலியல் தொல்லை 

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரியர் உட்பட 4 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

2.அமெரிக்காவில் முதலமைச்சர் பேச்சு

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அமெரிக்காவில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அமெரிக்கா - இந்தியா இடையேயான இருதரப்பு வர்த்தகம் மும்மடங்காக உயர்ந்து உள்ளதாக பேச்சு. 

3.ஒமியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்  

அமெரிக்காவின் ஒமியம் நிறுவனத்துடன் 400 கோடி ரூபாய் மதிப்பில் முதலீட்டு ஒப்பந்தம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. 

4.திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு.

திமுக சார்பில் முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் விருது- பாப்பம்மாள், அண்ணா விருது - அறந்தாங்கி மிசா இராமநாதன், கலைஞர் விருது- ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது - தமிழ்தாசன், பேராசிரியர் விருது - வி.பி.இராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் செப்.17ல் நடக்கும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

5.ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத் தடை 

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழக எல்லைக்கான நீர்வரத்து 25ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக அணைகளில் கூடுதல் நீர்திறப்பு, நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து உயர்ந்து உள்ளது.

6.தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

தமிழகத்தில் மேலும் 25 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 5% முதல் 7% வரை கட்டணம் உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 25 சுங்கச்சாவடிகள் வழியே செல்லும் வாகனங்கள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த ஜூனில் ஏற்கனவே 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல் ஆகி உள்ளது.

7.தனிநாடு கேட்கவில்லை - சீமான் 

தனிநாடு கேட்கவில்லை; இந்த நாடே என்னுடையதுதான். தெற்காசியா முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அப்படியென்றால் இந்த நாடே என்னுடையது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு. 

8.கார் பந்தயம் இறுதிப்போட்டி 

சென்னை தீவுத்திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகின்றது. தகுதிச்சுற்றுப் போட்டிகள் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகின்றது.

9.சென்னையில் மழை எச்சரிக்கை  

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. 

10.கார் ரேஸா! நாய் ரேஸா

சென்னையில் நடைபெற்று வரும் கார் பந்தயம் கார் ரேஸா அல்லது நாய் ரேஸா என்று தெரியவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சனம். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி