Republic Day 2024: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என் ரவி!
Jan 26, 2024, 09:40 AM IST
ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் நடந்த குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றினார்.
நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று (ஜன.26) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் இன்று காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏற்றி வைத்தார்.
குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்த ஆளுநர் முப்படையினர், காவல்துறையினர், தேசிய மாணவர் படை, பல்வேறு காவல் பிரிவினர், தீயணைப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு மாநில கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதையடுத்து, முப்படைகளின் கவச வாகனங்கள், அரசுத் துறைகளின் திட்ட விளக்கங்கள் அடங்கிய 21 அணிவகுப்பு வாகனங்கள் வலம் வந்தன.
இதைத் தொடர்ந்து, மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, திருத்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடர்பான காந்தியடிகள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மதுரை மாவட்டம் கொடிக்குளத்தை சேர்ந்த பூர்ணம் அம்மாள், தனது மகள் நினைவாக தனக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தானமாக அளித்தார். அவருக்கு முதல்வர் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
பின்னர் உரையாற்றிய ஆளுநர், சில நாட்களுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த வரலாற்று பூர்வமான நிகழ்ச்சி நாடு முழுவதிலும் சக்தியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் சட்டத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் நல்லாளுகைக்கான முழுப்பெரும் எடுத்துக்காட்டாக ராமராஜ்ஜியம் உள்ளது என பேசினார்.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் பாதுகாப்பு பணியில் 7,500 போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்