Tiruvanamalai: கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா
Nov 28, 2022, 12:15 PM IST
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்ல கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 10 நாள்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான தீபம் ஏற்றும் நிகழ்வு டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான தீப திருவிழாவையொட்டி கடந்த 24ஆம் தேதி காவல் தொய்வங்களின் வழிபாடு ஸ்ரீதுர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.
இதன்பின்னர் 10 நாள்கள் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று (ஞாயிற்றிக்கிழமை) நடைபெற்றது. அதிகாலை, 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாச்சலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இதையடுத்து விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் உள்பட உற்சவ சுவாமிகள் கோயில் தங்க கொடிமரம் எதிரே எழுந்தருளினர்.
காலை 5.30 மணிக்கு கோயில் தங்க கொடிமரத்துக்கு சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் 6.10 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோயில் தங்க கொடி மரத்தில் தீப விழாவுக்கன கொடியை சிவாச்சாரியர்கள் ஏற்றினர்.
இதையடுத்து காலை 7 மணிக்கு உற்சவர் பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு விநாயகர், சந்திரசேகரர் சுவாமிகளும், இரவு 10 மணிக்கு பஞ்சமூர்ததி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்க அருள்பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்ச ரதங்களின் தேரோட்டம் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றுஅதிகாலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் விநாயகர் தேரோட்டம் தொடங்கும்.
பின் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருான் தேர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர் தேர், பராசக்தியம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறும்.
இந்த விழாவின் பிரதான நிகழ்வான தீபத் திருவிழா டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய நாள் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2, 668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து திருவண்ணாமலை அய்யங்குளத்தில் டிசம்பர் 7ஆம் தேதி ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவம், டிசம்பர் 8ஆம் தேதி ஸ்ரீபராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம், டிசம்பர் 9ஆம் தேதி ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.
டாபிக்ஸ்