தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bjp: ஆட்டத்தை மாற்றும் தமிழக பாஜக! அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய தலைவர்கள் அறிவிப்பு! அடுத்து அண்ணாமலையா?

BJP: ஆட்டத்தை மாற்றும் தமிழக பாஜக! அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய தலைவர்கள் அறிவிப்பு! அடுத்து அண்ணாமலையா?

Kathiravan V HT Tamil

Jan 19, 2025, 08:25 PM IST

google News
தமிழக பாஜகவில் உள்கட்சித் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில் மாவட்ட தலைவர்களின் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.
தமிழக பாஜகவில் உள்கட்சித் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில் மாவட்ட தலைவர்களின் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.

தமிழக பாஜகவில் உள்கட்சித் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில் மாவட்ட தலைவர்களின் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு பாஜகவில் உள்கட்சித் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில் மாவட்ட தலைவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட தலைவர்களுக்கு, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பாஜகவின் மாவட்ட தலைவர்களாக பொறுப்பேற்று இருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில், நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழிகாட்டுதலின்படி நல்லாட்சியை கொண்டு வரவும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நமது தமிழகத்தை கொண்டு செல்லவும், அயராது உழைக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என கூறி உள்ளார். 

புதிய மாவட்ட தலைவர்களில் தென்காசி மாவட்ட தலைவராக ஸ்ரீதர் வேம்புவின் நெருங்கிய நண்பர் ஆன ஆனந்தன் அய்யாசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது அவர் தென்காசி மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த நியமனம் உற்று நோக்க கூடிய ஒன்றாக உள்ளது. மேலும் வேலூர் மாவட்டத்தில் புதிய தலைவராக தசரதனை நியமனம் செய்துள்ளதை எதிர்த்து சில நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளனர். 

புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல்

  1. கன்னியாகுமரி கிழக்கு - திரு.K.கோபகுமார்
  2. கன்னியாகுமரி மேற்கு - திரு.R.T. சுரேஷ்
  3. தூத்துக்குடி வடக்கு - திரு.K.சரவண கிருஷ்ணன்
  4. திருநெல்வேலி வடக்கு - திருAமுத்து பழவேசம்
  5. திருநெல்வேலி தெற்கு - திரு.S.P.தமிழ்செல்வன்
  6. தென்காசி - திரு ஆனந்தன் அய்யாசாமி
  7. விருதுநகர் கிழக்கு - திரு G.பாண்டுரங்கன்
  8. சிவகங்கை - திரு.D.பாண்டிதுரை
  9. மதுரை கிழக்கு - திரு AP.ராஜசிம்மன்
  10. மதுரை மேற்கு - திரு.K.சிவலிங்கம்
  11. திண்டுக்கல் கிழக்கு - திருD. முத்துராமலிங்கம்
  12. தேனி - திரு.P.ராஜபாண்டி
  13. திருச்சி நகர் - கே.ஒண்டிமுத்து
  14. திருச்சி புறநகர் - ஆர்.அஞ்சா நெஞ்சன்
  15. புதுக்கோட்டை கிழக்கு - திரு ஜெகதீசன்
  16. அரியலூர் - ஸ்ரீமதி.Dr.A.பரமேஸ்வரி
  17. தஞ்சாவூர் வடக்கு - திரு.தங்க கென்னடி
  18. திருவாரூர் - திரு.V.K.செல்வம் செல்வமகன்
  19. மயிலாடுதுறை - திரு.நாஞ்சில் R.பாலு
  20. கடலூர் கிழக்கு - திரு அக்னி கிருஷ்ணமூர்த்தி
  21. கடலூர் மேற்கு - திரு.K.தமிழழகன்
  22. செங்கல்பட்டு தெற்கு - திரு.Dr.M.பிரவீண்குமார்
  23. செங்கல்பட்டு வடக்கு - திரு.N.ரகுராமன்
  24. காஞ்சிபுரம் - திரு.தாமரை ஜெகதீசன்
  25. திருவள்ளூர் கிழக்கு - திரு.S.சுந்தரம்
  26. கள்ளக்குறிச்சி - திரு.Dr.M.பாலசுந்தரம்
  27. வேலூர் - திரு.V.தசரதன்
  28. திருப்பத்தூர் - திரு.M.தண்டாயுதபாணி
  29. சேலம் நகர் - திரு.TV.சசிகுமார்
  30. நாமக்கல் கிழக்கு - திரு.K.P.சரவணன்
  31. நாமக்கல் மேற்கு - திரு.M.ராஜேஷ்குமார்
  32. கோயம்புத்தூர் தெற்கு - திரு.R.சந்திரசேகர்
  33. நீலகிரி - திரு.DAதர்மன்

தமிழக பாஜகவில் புதிய தலைவரா?

தமிழக பாஜகவில் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த வாரத்தில் தமிழக பாஜகவுக்கு மாநிலத் தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலைக்கு பதிலாக நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படுவதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி