தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  விருதுநகர் திமுக பிரமுகர் மகன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

விருதுநகர் திமுக பிரமுகர் மகன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

I Jayachandran HT Tamil

Jul 13, 2022, 07:36 PM IST

google News
விருதுநகரை சேர்ந்த திமுக பிரமுகர் மகன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கைப் போலீஸார் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டல் வருவதாகவும் கூறப்படுகிறது.

நரிக்குடி : விருதுநகர் மாவட்டம் வீரகுடி ஊராட்சி முன்னாள் தலைவர் மகன் மீது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள வீரக்குடியில் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் மகன் ஹரிகிருஷ்ணன், அவரது தாயார் பாண்டியம்மாள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

நரிக்குடி வீரக்குடியைச் சேர்ந்த 27 வயது பெண் கன்றுக்குட்டிகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று, மாலையில் தனியாக வீடு திரும்பினார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், அந்தப் பெண்ணை பின்புறமாக சென்று கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதில் பயந்து போன அந்தப் பெண் அலறி கூக்குரலிட்டார். அவர சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவரவே பயந்து போன ஹரிகிருஷணன் அந்தப் பெண்ணை விட்டுவிட்டு தப்பியோடினார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்தப்பெண்ணை ஹரிகிருஷ்ணனின் தாயார் பாண்டியம்மாள் வந்து தரக்குறைவாக பேசி சம்பவம் பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நரிக்குடி போலீசார் ஹரிகிருஷ்ணன் மீதும், தாயார் பாண்டியம்மாள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ''புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி மிரட்டல்கள் வருகின்றன. எங்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளேன்'' என்றார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி