Savukku Shankar : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்தது ஏன் என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி!
Jun 06, 2024, 01:24 PM IST
Savukku Shankar : சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு பிறப்பித்தது சட்டவிரோதம் என்று முடிவானால் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்த பின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அரசு ரூபாய் 10,000 இழப்பீடு வழங்குமா என உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
savukku shankar : சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு பிறப்பித்தது சட்டவிரோதம் என்று முடிவானால் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்த பின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அரசு ரூபாய் 10,000 இழப்பீடு வழங்குமா என உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 12ஆம் தேதி குண்டர் சட்டத்தை சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
சவுக்கு சங்கரின் தாயார் ஆட்கொணர்வு மனு
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்த போது, எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என்ற உத்தரவாத மனுவை தாக்கல் செய்யும்படி சவுக்கு சங்கர் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு 3 ஆவதி நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவிச்சந்திரன் கடந்த நான்காம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறி மனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாமல் விசாரணைக்கு அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக குற்றம் சாட்டினார்.
தனிநபர்களின் சுதந்திரம் முக்கியமானது என்றும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என்றும் முடிவானால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்த பின் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் அரசு ரூபாய் 10000 இழப்பீடு வழங்குமா என்று கேள்வி எழுப்பினார்
இதையடுத்து பிற்பகல் 2.15 மணிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளி வைத்தார்
முன்னதாக இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கர் தரப்பில் உத்தரவாத மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், இதுவரை நடந்து கொண்ட செயல்பாடுகளை நியாயப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அரசு தரப்பு வாதிட்டது.
சவுக்கு சங்கர் தரப்பு எதிர்வாதம்
சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கர் கருத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லை பொது சொத்துக்களுக்கு பங்கம் ஏற்படவில்லை. 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையின் குண்டர் சட்ட உத்தரவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என வாதிட்டார்.
பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் மனு
மேலும் இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக சேர்த்துக் கொள்ள கூறி,பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் முறையீடு செய்து இருந்த நிலையில், இவர்கள் தரப்பின் வாதங்களும் கேட்கப்பட்டது.
இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளனர்.
நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், சமுதாயத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தன்னிடம் பேசியதால், இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு அவசரமாக எடுத்ததாகவும், மாறாக பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தால், என்னிடம் அவ்வாறு பேசியவர்கள் தங்கள் இலக்கை அடைந்துவிடுவதாக அர்த்தம் ஆகிவிடும் என்பதால் இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார்.
மேலும் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்வதாகவும் நீதிபதி சுவாமிநாதன் கூறி உள்ளார்.
அரசு தரப்புக்கு அவகாசம் தர வேண்டும் - நீதிபதி பாலாஜி
நீதிபதி பாலாஜியை பொறுத்தவரை, வழக்கமான நடைமுறைப்படி இந்த வழக்கில் அரசுத்தரப்பு பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும். பதிலுக்கு பிறகே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பு வழங்கி உள்ளார். இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் வழக்கு 3ஆவது நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்