தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rss Rally: ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்தலாம்! ஆனால்…! நீதிமன்றம் போட்ட கண்டிஷன்!

RSS Rally: ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்தலாம்! ஆனால்…! நீதிமன்றம் போட்ட கண்டிஷன்!

Kathiravan V HT Tamil

Oct 16, 2023, 07:10 PM IST

google News
”ஆர்.எஸ்.எஸ் பேரணியால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை வாதம்”
”ஆர்.எஸ்.எஸ் பேரணியால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை வாதம்”

”ஆர்.எஸ்.எஸ் பேரணியால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை வாதம்”

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த நிபந்தனைகள் உடன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

வரும் அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழகத்தின் 33 இடங்களில் RSS அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்து இருந்தது.

ஆர்.எஸ்.எஸ் பேரணியால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும்,  விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை, பசும்பொன் தேவர் குருபூஜை ஆகியவற்றை சுட்டிக்காட்டி பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என காவல்துறை நீதிமன்றத்தில் கூறி இருந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றி அணிவகுப்பு நடத்தலாம். சீருடை இல்லாமல் பேரணியில் யாரையும் அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து பேரணிக்கு அனுமதி வழங்கி உள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி