தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rain Alert: முழுமையாக விலகிய வடகிழக்கு பருவமழை! ஜன.30-31 வரை தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Rain Alert: முழுமையாக விலகிய வடகிழக்கு பருவமழை! ஜன.30-31 வரை தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil

Published Jan 27, 2025 03:39 PM IST

google News
Rain Alert: வரும் ஜனவரி 30அம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Rain Alert: வரும் ஜனவரி 30அம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Rain Alert: வரும் ஜனவரி 30அம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை முழுமையாக விலகிய நிலையில் வரும் ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க

 முழுமையாக விலகிய பருவமழை!

வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலகியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். ஜனவரி 29ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஜன.30 முதல் கனமழை எச்சரிக்கை!

வரும் ஜன.30ஆம் தேதி அன்று தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

ஜனவரி 31ஆம் தேதி அன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:-

இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

 

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.