Diwali: கறிச்சோறு! தீபாவளி முடிஞ்சும் ஓயாத பஞ்சாயத்து! சுமந்த் ராமனை வெளுக்கும் நெட்டிசன்கள்!
Nov 13, 2023, 01:19 PM IST
”தீபாவளிக்கு தமிழகத்தில் மது மோகம் எப்போதும் உண்டு.. ஆனால் இறைச்சி மோகம் உள்ளதாக சுமந்த் சி ராமன் ட்வீட்”
தீபாவளிக்கு மது மோகத்தை போலவே இறைச்சி மோகம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் போட்ட ட்வீட் பேசுபொருளாகி உள்ளது.
நாடு முழுவதும் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை நடந்து முடிந்த நிலையில், இறைச்சி வாங்குவற்காக மக்கள் வரிசையில் நிற்கும் செய்திகள் ஊடகங்களில் வெளியாகி இருந்தன. இது குறித்து அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் ட்வீட் செய்துள்ளார். அதில்,
தீபாவளிக்கு தமிழகத்தில் மது மோகம் எப்போதும் உண்டு.. ஆனால் இறைச்சி மோகம்.... சமீபகால நிகழ்வா? முந்தைய ஆண்டுகளில் பார்க்காதது, இன்று சேனல்கள் காண்பிக்கும் இறைச்சி கடைகளின் முன் நீண்ட வரிசைகள். தீபாவளிக்கு பிறகு அமாவாசை நாளில் பலர் இறைச்சி சாப்பிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அது பல ஆண்டுகளாக ஒரு பாரம்பரியம். வரிசைகளை யாராவது விளக்குகிறார்களா? இந்த ஆண்டு தீபாவளிக்கு ஆடுகளின் ஏல வசூல் சில இடங்களில் ரம்ஜான் திருநாளை விட அதிகமாக இருந்திருக்கலாம் என்று நண்பர் ஒருவர் என்னிடம் கூறுகிறார். என அதில் பதிவிடப்பட்டு இருந்தது.
சுமந்த் சி ராமன் ட்விட்டை விமர்சித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
திமுக ஆதரவாளரும், எழுத்தாளருமான டான் அசோக் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தீபாவளி என்றால் கறிக்குழம்பு. எனக்கு ஞாபகம் இருக்கும் வரை இப்படித்தான். பிராமணர்களின் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் இந்துக்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் என்று நினைக்கிறார்கள். இல்லை. BC/MBC/SC இந்துக்கள் பண்டிகைகளைக் கொண்டாடும் விதம் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் பிராமணர்களுக்கு நேர் எதிரான பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கிறது. தீபாவளியும் விதிவிலக்கல்ல என கூறி உள்ளார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள திமுக வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை, இட்லி, சாம்பார், பில்டர் காபி தான் தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவு என நம்ப வைத்தவர்கள். இன்று, இட்லியும் மட்டன் குழம்பும் தான் மண்ணின் உணவு என புரிய வைக்கப்பட்ட நாள்! என பதிவிட்டுள்ளார்.
தனது ட்வீட் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்து ட்வீட் செய்துள்ள சுமந்த் சி ராமன், தீபாவளி என்பது தமிழகம் மற்றும் அதன் மக்களின் ஒரு பண்டிகை என்பதையும், இறைச்சி உண்பது இங்கு பண்டிகையை கொண்டாடும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருப்பதையும் உறுதிப்படுத்தியதற்காக எனது ட்ரோல்களுக்கு நன்றி. இது தமிழர்களின் பண்டிகை அல்ல என்று தொடர்ந்து கூறும் ஸ்டாக்கிஸ்டுகள், நீங்கள் சிக்ஸருக்கு அடித்தீர்கள்😀 என கூறி உள்ளார்.
டாபிக்ஸ்