HBD Poet S. Abdul Rahman: ‘ஆலாபனை’ முதல் ‘கவிதை ஓர் ஆராதனை’ வரை ஆகச் சிறந்த படைப்புகள் தந்த கவிக்கோ பிறந்த நாள் இன்று
Nov 09, 2023, 04:45 AM IST
அவளுக்கு நிலா என்று பெயர், ஆலாபனை, பூக்காலம், மகரந்தச் சிறகு, விலங்குகள் இல்லாத கவிதை என பல நூல்களை எழுதியுள்ளார்.
சையத் அப்துல் ரகுமான் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞர் ஆவார். அவர் கவிக்கோ (கவிஞர்களில் பேரரசர்) என்ற பட்டத்தால் அறியப்பட்டார். தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்தார்.
சையது அப்துல் ரகுமான் 1937 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் 29 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். வானம்பாடி இலக்கிய இயக்கத்தைச் சேர்ந்தவர். ஆலாபனை கவிதைக்காக 1999 ஆம் ஆண்டு தமிழ் மொழிப் பிரிவில் சாகித்ய அகாடமி விருதை வென்றார். 2009ல் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். செம்மொழி தமிழ் மத்திய நிறுவனத்தின் தமிழ் மொழி மேம்பாட்டு வாரிய உறுப்பினராகவும் இருந்தார்.
அவளுக்கு நிலா என்று பெயர், ஆலாபனை, பூக்காலம், மகரந்தச் சிறகு, விலங்குகள் இல்லாத கவிதை என பல நூல்களை எழுதியுள்ளார்.
கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, கலைஞர் விருது என பல விருதுகளை வென்றுள்ளார். 79 வயதில் 2017ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி இவர் காலமானார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்