தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Maruthu Pandiyar: மருதுபாண்டியர்கள் அருங்காட்சியகம்: அரசு பதிலளிக்க உத்தரவு!

Maruthu Pandiyar: மருதுபாண்டியர்கள் அருங்காட்சியகம்: அரசு பதிலளிக்க உத்தரவு!

Dec 01, 2022, 07:17 PM IST

google News
மருது சகோதரர்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி முக்குலம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என மனு.
மருது சகோதரர்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி முக்குலம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என மனு.

மருது சகோதரர்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி முக்குலம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என மனு.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி முக்குலம் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களுக்கு சிலையுடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக வருவாய்துறை செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

மதுரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "மருது சகோதரர்கள் சிவகங்கை சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்கள். இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி இறுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களின் படைகள் குறித்து "வளரி" என்ற ஆங்கிலேய புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

மருது சகோதரர்கள் பல கோயில்கள், கிறிஸ்துவ ஆலயங்கள், மசூதிகள் கட்டுவதற்காக இடம் ஒதுக்கியுள்ளனர். மருது சகோதரர்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி முக்குலம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். ஆனால் எனது மனுவை ஏற்க மறுத்த அதிகாரிகள், அதனை நிராகரித்து விட்டனர்.

மாமன்னர்கள் சின்ன மருது மற்றும் பெரிய மருது - கோப்பு படம்

எனவே, மருது சகோதரர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க கொடுத்த மனுவை ரத்து செய்த அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து, சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் சிலையுடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக வருவாய்துறை செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி