தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Hogenakkal: ஒகேனக்கல்லில் 13ஆவது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடை!

Hogenakkal: ஒகேனக்கல்லில் 13ஆவது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடை!

Divya Sekar HT Tamil

Oct 23, 2022, 10:10 AM IST

google News
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 78 ஆயிரம் கனஅடியாக நீடித்த நிலையில் 13ஆவது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணா சாகர், கபினி ஆகிய 2 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. 

நேற்று ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 78 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படியும் அதே அளவு நீடித்து வந்தது. இதன் காரணமாக ஐவர்பாணி, ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

இதனால் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் இன்று 13ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் இன்று 9ஆவது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி கரையோர பகுதிகளில் வருவாய் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி