தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ops About Sengottaiyan: செங்கோட்டையன் யார் தெரியுமா? ப்ரஸ் மீட்டில் ஓபிஎஸ் ஓபன் டாக்! ஈபிஎஸ்க்கு அதிர்ச்சி?

OPS About Sengottaiyan: செங்கோட்டையன் யார் தெரியுமா? ப்ரஸ் மீட்டில் ஓபிஎஸ் ஓபன் டாக்! ஈபிஎஸ்க்கு அதிர்ச்சி?

Kathiravan V HT Tamil

Published Feb 13, 2025 01:55 PM IST

google News
ஏசியங்களுக்கு செங்கோட்டையன்தான் பதில் சொல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமி உடன்தான் அவர் உள்ளார். இன்றைக்கு உள்ள அதிமுக தலைவர்களிலேயே மூத்த தலைவர் செங்கோட்டையன்தான். எம்ஜிஆர் காலத்திலேயே அவர் எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் ஆகிவிட்டார். நானும் அவரும் இணைந்து செயல்பட்டு உள்ளோம்.

நான், சின்னம்மா, டிடிவி தினகரன் ஆகிய எல்லோரும் இணைய வேண்டும். ஒன்று சேர்ந்தால்தான் ஜெயிக்க முடியும் என்று சொல்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார். 

மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பு விவரம்:-

கேள்வி:- செங்கோட்டையன் சில வருத்தங்களை வெளிப்படுத்தி உள்ளாரே?

என்னை பொறுத்தவரையில் அண்ணன் செங்கோட்டையன் மீது எந்த அதிருப்தியும் இல்லை. அவர் பழைய கட்சிக்காரர், விசுவாசம் மிகுந்தவர். கட்சி ஒன்றாக இயங்க வேண்டும் என்ற மனசாட்சி உடன் நடப்பவர். 

ஏசியங்களுக்கு செங்கோட்டையன்தான் பதில் சொல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமி உடன்தான் அவர் உள்ளார். இன்றைக்கு உள்ள அதிமுக தலைவர்களிலேயே மூத்த தலைவர் செங்கோட்டையன்தான். எம்ஜிஆர் காலத்திலேயே அவர் எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் ஆகிவிட்டார். நானும் அவரும் இணைந்து செயல்பட்டு உள்ளோம். 

கேள்வி:- செங்கோட்டையன் தலைமையில் அணி உருவாகுமா?

அதுபற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்.  

கேள்வி:- ஒருங்கிணைந்த அதிமுகவில் நீங்களும் இருப்பீர்களா?

நானும் அதைத்தான் சொல்கிறேன். நான், சின்னம்மா, டிடிவி தினகரன் ஆகிய எல்லோரும் இணைய வேண்டும். ஒன்று சேர்ந்தால்தான் ஜெயிக்க முடியும் என்று சொல்கிறேன். ஆனால் ஒன்று சேர முடியாது நான் ஜெயித்துக் காட்டுவேன் என்று சொல்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 7 இடங்களில் டெபாசிட் போச்சு, 13 இடங்களில் 3ஆவது இடம் கிடைத்தது. 

ராமநாதபுரத்தில் என்னை தோற்கடிக்க அருமை நண்பர் உதயகுமார் அவர்கள் 6 பன்னீர் செல்வத்தை கூட்டி வந்தார்.  இரட்டை இலை சின்னம் டெபாசிட் போனது எனக்கு வருத்தம்தான். என்னை இரட்டை இலையில் எதிர்த்து நிக்க கூடிய சூழலை அவர்கள்தான் உண்டாக்கினார்கள். 

கேள்வி:- பாஜக வடமாநிலங்களில் கட்சிகளை உடைத்து ஆட்சியை பிடிக்கிறது. அதே போன்ற நிலை அதிமுகவுக்கு உண்டாகுமா?

இது சிந்தனைக்கு ஒவ்வாத கருத்து, வடமாநிலம் வேறு, நமது தமிழ்நாடு வேறு. தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் எதை விரும்புகிறார்களோ அதை அடிப்படை அதிமுகவினர் செய்துகாட்டுவோம். 

கேள்வி:- பாஜக உடன் கூட்டணி வைத்ததால்தான் தோற்றோம் என்று சொல்கிறார்களே?

ஜெயலலிதா பாஜக உடனும் கூட்டணி வைத்தார். அதை எதிர்த்தும் போட்டியிட்டு உள்ளார். நமது திராவிட பாரம்பரியத்தின் அடிப்படையில் திராவிடக் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம். 

கேள்வி:- அண்ணாமலை பேச்சுதான் பாஜக- அதிமுக கூட்டணிக்கு பிளவு என கூறப்படுகிறதே?

அந்தந்த கட்சித் தலைவர்கள் அவர்களின் கட்சியை வளர்க்கத்தான் பேசுவார்கள். அதை தவறு என்று சொல்வதற்கு நாம் யார்?, அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை அவதூறாக பேசவில்லை என அண்ணமலையே மறுத்து உள்ளார். 

கேள்வி:-நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கி உள்ளாரே?

சுவாமியே சரணம் ஐயப்பா….! அரசியல் களத்தில் விஜய் எந்த இலக்கை நோக்கி செல்கிறார் என்பதே முக்கியம். அவர் வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்து உள்ளார். தமிழர் நலன், தமிழர் பாரம்பரியம், சாதி, மதத்திற்கு அப்பார்ப்பட்டு அனைத்து மக்களையும் சமமாக பார்க்கும் நோக்கம் விஜய்யிடம் உள்ளதா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். அதன் அடிப்படையில் அவர் வெல்வாரா?, தோற்பாரா என்பது தீர்மானிக்கப்படும். 

கேள்வி:-  234 தொகுதிகளிலுமே திமுகதான் வெற்றி பெறும் என திமுக கூறி உள்ளதே?

தமிழ்நாட்டில் நூறுக்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளது. நூறு கட்சிகளுமே நாங்கள்தான் முதலமைச்சர் என்று சொல்கிறார்கள். 

கேள்வி:- விஜய் தேசிய ஜனநயாக கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக் கொள்வீர்களா?

இது பாஜக தலைமையில் உள்ள கூட்டணி, தேசநலன் கருதி யாரை சேர்ப்பது, யாரை சேர்க்க கூடாது என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

கேள்வி:- பெரியாரை பற்றி அவதூறு பேசுபவர்களை நீங்கள் கண்டிப்பதே இல்லையே?

 திராவிட இயக்கத்தின் தலைக்காவிரியே பெரியார்தான். அதில் இருந்துதான் திமுக, அதிமுக வந்து உள்ளது. நான் சீமானை சென்று கடிக்கவா முடியும். பெரியார் இல்லை என்று சொன்னால் ஏழை, எளிய மக்கள் சாதி வித்தியாசம் இல்லாமல் சீர்த்திருத்தங்களை செய்து உள்ளார். அதில் கடவுள் மறுப்பை மட்டும் அம்மா அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.