தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Seeman Vs Prashant Kishore: ’ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?’ விளாசும் சீமான்!

Seeman vs Prashant Kishore: ’ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?’ விளாசும் சீமான்!

Kathiravan V HT Tamil

Updated Feb 15, 2025 05:09 PM IST

google News
விஜய்க்கு ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா ஆகிய வியூக வகுப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள், இங்குள்ள சிக்கல்கள் தெரியும். பீகாரில் இருந்து பிரசாந்த் கிஷோர், ஆந்திராவில் இருந்து சுனில் ஆகியோர் வர வேண்டும் என்றால் உங்களுக்கு மூளை இருக்கிறதா?
விஜய்க்கு ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா ஆகிய வியூக வகுப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள், இங்குள்ள சிக்கல்கள் தெரியும். பீகாரில் இருந்து பிரசாந்த் கிஷோர், ஆந்திராவில் இருந்து சுனில் ஆகியோர் வர வேண்டும் என்றால் உங்களுக்கு மூளை இருக்கிறதா?

விஜய்க்கு ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா ஆகிய வியூக வகுப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள், இங்குள்ள சிக்கல்கள் தெரியும். பீகாரில் இருந்து பிரசாந்த் கிஷோர், ஆந்திராவில் இருந்து சுனில் ஆகியோர் வர வேண்டும் என்றால் உங்களுக்கு மூளை இருக்கிறதா?

பீகாரில் ஒரு தொகுதிகளை கூட வெல்ல முடியாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். 

சீமான் செய்தியாளர் சந்திப்பு:-

கேள்வி:- தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளதே?

உயரடுக்கு பாதுகாப்பு அண்ணாமலை உள்ளிட்டோருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. தேவைப்படுகிறது என்பதால் அதை கேட்டு வாங்கி கொள்கின்றனர். விஜய்க்கு இது போன்ற பாதுகாப்பு தேவைப்படுவதால் கேட்டுக் வாங்கி கொள்கிறார். நான் மக்களிடம் இருந்து மக்களுக்காக வந்து உள்ளேன். என்னை பொறுத்தவரை நான்தான் மக்களுக்கு பாதுகாப்பு என்று சொல்லுவேன். தம்பி விஜய் போல் புகழ்பெற்ற நடிகருக்கு என்னை போல் நின்று பேசுவது கடினம். அதனால் பாதுகாப்பு தேவைப்பட்டு இருக்கும். 

கேள்வி:- வெடிகுண்டு குற்றவாளியை அப்பா என்று சீமான் சொல்கிறார். கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அப்பா இல்லையா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளாரே?

குஜராத்தில் நடந்த கலவரத்தில் இறந்த மக்களுக்கு அம்மா, அப்பா உள்ளார்களா இல்லையா?, ஈழத்தில் கொன்று ஒழிக்கப்பட்டவர்களுக்கு அப்பா இல்லையா?, இலங்கை நட்பு நாடாக இருப்பது எப்படி?, மணிப்பூர் கலவரத்தில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை என்ன?, கோவை குண்டு வெடிப்பு பற்றி பேசும் அனைவரும் குஜராத் கலவரத்தை பற்றியும் பேச வேண்டும். ராஜீவ் காந்தி மரணத்தை பற்றி பேசுபவர்கள், அவரால் அனுப்பப்பட்ட ராணுவம் செய்த பேரழிவை பற்றியும் பேச வேண்டும். அல்லா மீது ஆணையாக சொல்கிறேன் இஸ்லாமிய பெருமக்கள் எனக்கு ஓட்டுப்போட்டதே இல்லை. 

கேள்வி:- அரசியல் ஆதாயத்திற்காக பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளதே?

அதில் அரசியல் ஆதாயம் இருந்தால் நீயும் பயன்படுத்தலாமே. 200க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. பாஸ்போர்ட் பறிமுதல் செய்து எந்த நாட்டுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. எல்லாத்திற்கும் காரணம் அந்த படத்தை பயன்படுத்தியதுதான். 

கேள்வி:- மயிலாடுதுறையில் கள்ள சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர்களை கொலை செய்யப்பட்டு உள்ளனரே?

முன்விரோதம் காரணமாக கொலை நடந்து உள்ளதாக காவல்துறையினர் கூறி உள்ளனர். கள்ள சாராய விற்பனையை தடுக்க சென்ற பிள்ளைகளை வெட்டிக் கொன்றதை விட காவல்துறையின் விளக்கம் பெருந்துயரம். அங்குள்ள அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்வார்கள். அரசு எந்த பொறுப்பையும் ஏற்காது. 

கேள்வி:- காசி தமிழ் சங்கத்திற்கு ரயில் சென்ற தமிழ்நாட்டு மக்கள் மீது வட மாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனரே?

வடமாநிலத்தவர்கள் எந்த ஒழுங்கையும் கடைப்பிடிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டுக்கு வரும் வட இந்தியர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளது. இது ஒன்றும் புது நிகழ்வு அல்ல. நமது ஊரில் தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டு, தமிழர்களுக்கு வேலை கொடுக்காதீர்கள் என்று போராடியவர்கள் அவர்கள்.  

கேள்வி:- தேர்தல் வியூக வகுப்பாளர்கள் ஆலோசனையை பணக்கொழுப்பு என்று கூறி உள்ளீர்களே?

தேர்தல் வியூக வகுப்பாளர்கள் என சொல்லப்படுபவர்கள். பல ஆண்டுகளாக நமது நாட்டில் கட்சி அரசியல், தேர்தல் அரசியலையே செய்கிறார்கள். ஆனால் மக்கள் அரசியலை யாரும் முன்னெடுப்பது இல்லை. தேர்தலில் மட்டுமே வெல்வது மட்டுமே என்றால் அது வியாபாரம். 

விஜய்க்கு ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா ஆகிய வியூக வகுப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள், இங்குள்ள சிக்கல்கள் தெரியும். பீகாரில் இருந்து பிரசாந்த் கிஷோர், ஆந்திராவில் இருந்து சுனில் ஆகியோர் வர வேண்டும் என்றால் உங்களுக்கு மூளை இருக்கிறதா?; ஏற்கெனவே 2 வியூக வகுப்பாளர்கள் இருக்கும் போது பீகாரில் இருந்து பிரசாந்த் கிஷோரை ஏன் அழைத்து வர வேண்டும். குருவி உட்காரும்போது பணம் பழம் விழுந்த கதைதான் இது. பீகாரில் பிரசாந்த் கிஷோரால் ஒரு தொகுதியில் நிற்க முடியவில்லை. உனது ஸ்டெடர்ஜி என்ன ஆச்சு?, 

 

 

 

 

 

 

 

 

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.